More than a Blog Aggregator night writter: March 2013

Wednesday, March 27, 2013

இது எப்படி இருக்கு 

 

முகிலன் தினேஷ்

8:55 PM  - 
Mobile
 -  Public
TN government should allow Sri Lankan players to play in Chennai on one condition. All the players playing at Chennai should wear BLACK BANDS moaning the innocent Tamils killed by the Ethnic cleansing, TN fishermen shot by Sri lankan navy and condemning the inhuman atrocities by Sri Lankan army during the war.

Thursday, March 21, 2013

மாணவ சமூகம், மாதவம் செய்கிறது,

மாணவ சமூகம் 
மாதவம் செய்கிறது,
வரம் விரைவில் 
வரும் எனற நம்பிக்கையோடு ............
 
சின்னுசாமி facebookயில் இதை பகிர்ந்துள்ளார். படிக்கும் போதே கண்கள் கலங்கின.
 
சினுசாமிக்கும், தாணி - ஆட்டோ ஓட்டுனருக்கும், பா.காளிமுத்துக்கும், காவல் துறை அதிகாரிக்கும், கோடான கோடி நன்றிகள் மற்றும் வந்தனங்கள்.
 
 
நிகழ்வு - ஒன்று

சூளை மேட்டில் இருக்கும் கோகுலம் தங்கும் விடுதியில் இருந்து வெளியேறி நெடுஞ்சாலைக்கு வந்த போது ஒரு ஆட்டோக்காரர் (தாணி ஓட்டுனர்) செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருந்தார். போகிற இடத்தைச் சொல்லி எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றேன். "நூறு ரூபாய் ஆகும் சார்". தூக்கி வாரிப் போட்டது. அதிகம் போனால் இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தொலைவு தான் இருக்கும் நான் செல்ல வேண்டிய இடம்.

ஐம்பது ரூபாய் தருகிறேன் என்று அதிரடியாகச் சொன்னேன், இரண்டு நிமிட உரையாடலில் அறுபது ரூபாய்க்கு ஒப்புக் கொண்டார். பயணம் துவங்கியது, "சார், நீங்க கோயம்பேட்ல எங்க போகணும்?".

"செங்கொடி அரங்கம்,"

"அது எங்க சார் இருக்கு?"

"அதாங்க லயோலா கல்லூரி மாணவர்கள் பட்டினிப் போராட்டம் நடத்துறாங்க இல்லையா?"

"அதுக்குப் பக்கத்துக்கு ஹோட்டலா சார்"

"இல்லங்க, அங்கேயே தான், அவங்களுக்கு வாழ்த்துச் சொல்றதுக்காகவே பெங்களூரில் இருந்து வர்றேன்"

அமைதியானார் தாணி (ஆட்டோ) ஓட்டுனர்.

இடம் வந்ததும் இறங்கினேன், சட்டைப் பையில்  கையை இட்டு ஒரு நூறு ரூபாய் நோட்டை வெளியில் எடுத்துக் கொடுத்தேன்.

"இல்ல சார், வச்சுக்குங்க"

"என்ன ஆச்சு!!!!!"

"என்னால போராட்டம் எல்லாம் பண்ண முடியாது, ஆனா, நானும் தமிழன் தான் சார், பெங்களூர்ல இருந்து இங்க வந்து வாழ்த்துச் சொல்ற உங்களை மாதிரி எனக்கும் உணர்வு கொஞ்சமாச்சும் இருக்காதா. ஒரு உதவின்னு நினைச்சுக்குங்க சார்"

சென்னையின் போக்குவரத்தில் கரைந்து காணாமல் போகிறார் அந்த தாணி ஓட்டுனர், மெல்ல நடந்து அக்கினிக் குஞ்சொன்றை மரப் பொந்துகளில் அடைகாத்த தம்பிகளைப் பார்க்க நடக்கத் துவங்கினேன் நான்.

நிகழ்வு - இரண்டு

(தம்பி பா.காளிமுத்து சொல்லக் கேட்டது)

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகம், தொண்டை வறண்டு போகுமளவுக்குக் கடுமையான முழக்கங்கள் இட்டபடி மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், சுற்றிலும் காவலர்கள் பாதுகாப்புக்காக அவர்களோடு நின்று கொண்டிருக்கிறார்கள்.

"கொடுங்கோலன் ராஜபக்ஷேவைத் தூக்கிலிடு"

"இந்திய அரசே, இலங்கையை ஆதரிக்காதே"

"தனித் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்து"

"போர்க்குற்றவாளிகளைத் தூக்கிலிடு"

"வெல்லட்டும் வெல்லட்டும், மாணவர் புரட்சி வெல்லட்டும்".

முழக்கங்கள் விண்ணதிர ஒலிக்கிறது.

இடைவெளியில் சில மாணவர்கள் தேநீர் அருந்துவதற்காக அருகில் இருக்கும் கடைக்குள் நுழைகிறார்கள்.

பாதுகாப்புக்காக அங்கு வந்திருந்த சில அதிரடிப்படை வீரர்களோடு தலைமைக் காவலர் அங்கு நின்று கொண்டிருக்கிறார்.

மாணவர்கள் உள்ளே நுழையத் தயங்கியபடி வெளியே நின்றபடி தேநீர் சொல்கிறார்கள்.

தலைமைக் காவலர் முழக்கங்கள் இட்டுக் களைத்திருந்த மாணவர் ஒருவரை அழைக்கிறார்.

"ஏலே, காலைல இருந்து எதாச்சும் சாப்டியாலே".

"கண்ணெல்லாம் உள்ள கூடி போயிட்டு".

"உயிர விட்டுக் கத்தாதலே"

"வயித்துக்கு எதாச்சும் சாப்பிடு"

காவலரின் திடீர்ப் பாசம் கண்டு மருள்கிறார்கள் மாணவர்கள்.

தலைமைக் காவலர் கடைக்காரரிடம் சொல்கிறார், "யோவ், கோட்டிப் பயலுகளுக்கு என்ன வேணுமோ கொடும், துட்டு நான் குடுக்கேன் என்ன???"

எனக்கும் இவங்களப் போல ஒரு மகன் இருக்காம்ல, மூணு நாளா தூத்துக்குடில பட்டினியாக் கிடக்கான், செத்தாலும் பரவாயில்லப்பா, இப்போ விட்டா எப்பவுமே நாம ஜெயிக்க முடியாதுன்னு போன்ல சொல்றான். என்ன செய்றது, நாங்க பாக்குற வேலை அப்பிடி, போலீஸ்காரனும் மனுஷன் தாம்ல, எம்மக்களப் போலத் தான் உங்களைப் பாத்தாலும் தெரியுது , நல்லா வயித்துக்குச் சாப்பிடுங்க, அப்புறமா போராட்டம் பண்ணுங்க".

"வேண்டாம்னு தடுக்கவும் முடியல, பண்ணுங்கன்னு ஆதரிக்கவும் முடியல, போலீஸ்காரன் பொழப்பு ஒரு சாபக்கேடு கண்ணா",

பக்கத்தில் இருக்கும் காவலரிடம் புலம்பி விட்டு மாணவர்கள் கொடுக்க முயன்ற பணத்தைத் தடுத்து தனது காக்கிச் சட்டையின் ஈரத்தில் இருந்து நூறு ரூபாய்த் தாளை எடுத்து கடைக்காரரிடம் கொடுக்கிறார் தலைமைக் காவலர் என்று சொல்லப்படுகிற ஒரு தமிழனின் அப்பா.

தமிழகமெங்கும் இப்படித்தான் மாணவர்கள் தங்கள் சொந்த இனத்தின் மனசாட்சியை உலுக்கியபடி வீதிகளில் வெறி கொண்ட கண்களோடும், நிமிர்ந்த நெஞ்சங்களோடும் அலைகிறார்கள், இழந்த தமிழர்களின் மானத்தை மீட்டெடுக்கும் புதிய போராளிகளாய் அவர்கள் உலகெங்கும் போர்க்கோலம் பூண்டிருக்கிறார்கள்.

வழக்கமாய் திரைப்பட அரங்குகளின் முன்னாலும், கிரிக்கெட் மைதானங்களின் முன்னாலும் படை திரளும் ஒரு பாமரக் கூட்டம் என்று பகடி பேசியவர்களின் முகங்களைக் கேள்விக் குறிகளால் நிரப்பியபடி தங்கள் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் கூர்மையாய்த் திரளும் இவர்களின் புதிய அவதாரம் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு எம்மை அழைத்துப் போகிறது.

தெளிவான சொற்கள், சமரசம் இல்லாத கோரிக்கைகள், மண்டியிடாத வீரம், ஒழுங்கான நகர்வுகள்.

நெடுங்காலத் தோல்விகளுக்கும், குறுகிய வெற்றிகளுக்கு அப்பால் தெளிவான ஒரு புள்ளியாய் விடியல் எமை நோக்கி வருகிறது.

இப்போது நமது கடமை தலைமைக் காவலர் செய்ததைப் போல எமது தம்பிகளின் களைப்பைப் போக்குவதும், அவர்கள் நடக்கும் பாதையைச் சுத்தம் செய்வதும் மட்டும்தான்.

உங்களைச் சுற்றி நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக என்று போராடத் துணிந்தீர்களோ அப்போதே நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்.

தம்பிகளா, தங்கச்சிகளா, என்னமோ போங்கடா, முன்ன எல்லாம் உங்களைப் பார்த்தால் எரிச்சல் எரிச்சலா கடுமையான கோவம் வரும், இப்போ ஒரு பத்து நாளா உங்களைப் பாத்தா அப்படியே அணைச்சு நிறைய முத்தம் குடுக்கணும் போலத் தோணுது, சந்தோசத்துல திக்கு முக்காட வைக்கிறதுன்னா இதாண்டா பயலுகளா....ரொம்பப் பெருமையா இருக்கு, நிமிந்து நடந்து ரொம்ப நாளாச்சுடா.....................................வாழ்த்துக்களும், முத்தங்களும் உலகத் தமிழர்களின் உதடுகளில் இருந்து........

தொடரட்டும் உங்கள் போராட்டம், வெல்லட்டும் தனித் தமிழீழம்.

Wednesday, March 20, 2013

நமீதாவின் கவிதை

 

நமீதாவின் கவிதை 

(சுட்டது)

 
இது நான் நெட்டில் சுட்டது. என் கவிதையை விட நல்லாவே இருந்தது எனவே இதை பகிறுகிறேன் 
 
என்றும் அன்புடன்

சந்தோஷ் 

பரதேசிக்கும்(பிற தேசம் சென்று பிழைப்போர்)பொருந்தும்


பரதேசி 

2 நாட்களுக்கு முன்னால் படம் பார்த்து, இப்பொழுது தான் மீண்டு வந்திருக்கின்றேன் .

இங்கே நான் விமர்சனம் பண்ண போவதில்லை. எல்லோரும் ஒரு முறை கண்டிப்பாய் படம் பாருங்கள் என்ற வேண்டுக்கோள் மட்டுமே விடுகிறேன்.


வசனங்கள் மிகவும் கூர்மை

எல்லாம் 100 வருஷம் மரம்டா இது,
இலையை புடுங்கி புடுங்கி நறுங்கிப் போய் கிடக்கு

தங்கள் இனத்தையும் வளர விடாமல் நசுக்கப் போகிறார்கள் என்று சொல்லுமிடமா என்ற சந்தேகம் எனக்கு.

வெள்ளையனிடம் அடி வாங்கிய கங்காணிக்  கோவத்தில் சொல்லும் வசனம்

வெள்ளகார ..ப்............மவனே

இது போல் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இது பரதேசி விமர்சனமல்ல எனவே நீங்களே  படம் பார்த்து ரசிக்க விட்டுவிடுகின்றேன் .

இந்த பாட்டு வரிகள் எல்லா பரதேசிக்கும் (பிற தேசம் சென்று பிழைப்போர் )பொருந்தும்.





ஊரெல்லாம் விட்டு நம் இளமை கெட்டு
நாம் வெளியானோம் பூனைக்கு வாக்கப்பட்டு
ஒரு மானம் கெட்டு சிறு சோறு திம்போம்
பேய் மழையோடும் பனியோடும் தூக்கங்கெட்டு



 
 
என்றும் அன்புடன் 
 
சந்தோஷ் 


Tuesday, March 19, 2013

சின்ன  சின்ன  சந்தோஷங்கள் 
 
எல்லோரும் அவியல், துவையல் என்று செய்யும் போது,
நிஜ சமையல் கலைஞன் நான், ஏன் கூட்டாஞ்ச்சோறு  செய்யக் கூடாதென?
இதோ உங்களை இம்சிக்க  ...............

இந்த பதிவிலிருப்பதெல்லாம் நான் முன்பு எங்கோ படித்து ரசித்தவைகள்,

மற்றும் எனது சுய கன்னி முயற்ச்சிகளும் 
 

பொதுவான கருத்து 

 
இப்பொழுதெல்லாம்  குழந்தைகளுக்கு 
 உணவாக cerealதான்   கிடைக்கின்றன 
:
:
:
காரணம்  serial தானோ  .

 காதல் ஹைக்கூ 

 
நான்  அவளுக்கு ஐஸ்கிரீம் தந்தேன் 
அவள் உருகினாள்
நானோ உறைந்தேன்.

 

ஒரு சின்ன காதல் கதை


ராமுக்கு சீதையை முதல் பார்வையிலையே பிடித்து போனது.

அவளின் குரலுக்கு மயக்கினான்,
குழலுக்கு ஒப்பிட்டு.

அவளோடு சேர்ந்திருப்பதுபோல்
கனவு கொண்டான்,
காதல் வளர்த்தான்.

கனவு நிஜமாக
காதல் வளர, குழந்தைகள் பெருக
குடும்பமாய் கொண்டாடினான்.

அந்த காதல்
அவனை இட்டுச் சென்றது
அகமும் புறமும் அழகாக,

திடுமென ஒரு நாள்

துயரம் வந்தது
துணையாக கூரியரை அழைத்துக்  கொண்டு.

விவாகரத்து கடிதம்
விழிப்பை தந்தது,

நிஜ வாழ்கை
நித்திரையின் கனவுப் போல்...

சுகமானதல்ல என்பதை
சொல்லியப்படி.

Divorce judgment day,
It was a success...............
but still a failure.

ஒரு இளைஞனின்  புலம்பல் 


When I called her, her phone was engaged.
When I met her, she was engaged.


ஒரு சின்ன கற்பனை 


இன்றைய தமிழ்நாட்டின் current situation 


vacuum cleanerகள்  இப்பொழுது அறிமுகமானால் .........

ஒரு விற்பனையாளர் ஒரு வீட்டுக்கு சென்று கதவைத் தட்டினார். கதவைத் திறந்த மூதாட்டி சொல்ல வந்ததை கேளாமல் பிளாஸ்டிக் பையிளுள்ள சாணத்தை   தரையில் கொட்டி...
பெருமிதமாய் 
 
"நான்  இதை எனது vaccum cleanerரைக் கொண்டு சுத்தம் செய்யாவிட்டால் 
 
நானே இதை சாப்பிடுக்கின்றேன்" என்றார் ஆர்வமாய்.
 
மூதாட்டி "உனக்கு தொட்டுக் கொள்ள ஏதேனும் தேவைப்படுமா" என்றார் அமைதியாக.
 
ஏன் என்ற  விற்பனையாளருக்கு, எங்கள் வீட்டில் கரண்டில்லை, கரண்ட் வர இன்னும் 14 மணி நேரமாகும் என்றார்.
 

கதையின் நீதி :

 
கமெண்டில்  உங்களுக்கு பிடித்த நீதியைச்  சொல்லவும் 
 
1 - எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
     எண்ணுவம் என்பது இழுக்கு.
 
2 - முடிப்பது எப்படி என்று தெரிந்தப்  பின்னே
      ஒரு செயலைத்  துடங்குவது என்பது சால சிறந்தது 
 
3 - ஆழம் தெரியாமல் காலை விடாதே 
 
 
 
 

     கஞ்சனின் கடைசி ஆசை 

 
ஒரு கஞ்சன் வாழ் நாள் முழுவதும் தான் சம்பாதித்த காசையெல்லாம் செலவு செய்யாமல் சேர்த்து வைத்தான்.
 
காசை தவிர வேறு எதையும் நேசிக்காத அவன், தன் மரணப் படுக்கையில் தனது மனைவியை அழைத்து, எனது கடைசி ஆசையை நீ தான் நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி,
"நான் சேர்த்து  வைத்த காசையெல்லாம்  என்னுடன் புதைத்து விடு" என்றான்.
 
சம்மதித்த மனைவியும் அவ்வாறே செய்தாள்.
 
கூட இருந்த உறவினரும், நண்பர்களும் "ஏன் இப்படி செய்தாய், நீ என்ன முட்டாளா?" என்றனர்.
 
அதற்கு மனைவி "நான் அவர் கடைசி ஆசையை நிறைவேற்றினேன், அதே நேரம் எல்லா பணத்தையும் எனது பேங்க் அக்கௌண்டில் போட்டு விட்டேன், அதற்கான என் கையெழுத்து இட்ட chequeகை தான் அவருடன் புதைத்தேன் என்றார்.
 

கதையின் நீதி :

 
1 - உங்களுக்கு தெரியாததா ...........
 
 
 
 
மற்றும் என் ஆல் டைம் favourite song 
டி ஆரின் ரசிகன் என்பதால் மட்டும் அல்ல 
இந்த வரிகளுக்கு இணையாய் 
வேறு எதை சொல்ல 
 
 
 
 
 
என்றும் அன்புடன் 
 
சந்தோஷ் 
 
 

Thursday, March 14, 2013

நான் இரசித்த sms ஜோக்ஸ் - 2

 

 

1 - What is the longest word in the English language?

           SMILES: there is a mile between the first and last letters!"

 

2 - Did you hear that a baby was fed on elephant's milk and gained twenty pounds in a week.

        That's impossible. Whose baby?

       An elephant's

 

3 - A man is talking to God.

 

          The man: "God, how long is a million years?"

          God: "To me, it's about a minute."

          The man: "God, how much is a million dollars?"

          God: "To me it's a penny."

          The man: "God, may I have a penny

 

4 - What is white when it's dirty and black when it's clean?

            A blackboard

 

5 - Said to a railroad engineer:

      What's the use of having a train schedule if the trains are always late.

      The reply from the railroad engineer:

      How would we know they were late, if we didn't have a schedule?

 

6 - Teacher: What are some products of the West Indies?

       Student: I don't know.

       Teacher: Of course, you do. Where do you get sugar from?

       Student: We borrow it from our neighbor

 

7 - ஆசிரியர் - எங்கடா உன்னோட ஹோம் ஒர்க்...?

      மாணவன் -  அதை வச்சு பேப்பர் பிளேன் செஞ்சிருந்தேன் சார். அதை  

       எவனோ ஹைஜாக் பண்ணிட்டான்

 

 

8 - மனைவி : நம்ம குடும்ப விசயம் வெளிய போகாம இருக்கிறது உங்க  கையிலதான் இருக்கு.

           கணவன் : அதுக்கு நான் என்ன செய்யணும்?

       மனைவி: நான் கோபப்பட்டு  அடிச்சாலும் நீங்க கூச்சல் போட்டு ஊரைக் கூட்டக் கூடாது. கம்முன்னு இருக்கணும் சரியா? ...

 

 

9 - மனைவி - எதுக்கு அடிக்கடி என் முகத்தில் தண்ணி தெளிக்கிறீங்க

        கணவர் - உங்க அப்பா உன்னை 'பூ' மாதிரி பார்த்துக்க சொன்னார்ல அதான்...!

 

 

10 - கல்லூரி ஆசிரியர் - படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா போதும். மாணவன் - வீட்லயா இல்லை கிளாஸ்லயா சார்..?. ஆசிரியர் - @@###<<<<>>????

 

 மாணவன்- பாவம், அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு... விட்ருவோம்

Tuesday, March 12, 2013

America Vs தமிழ்நாடு

 

என் கருத்து இதில் ஏதுமில்லை. தமிழ் வளர்க் பாடுபடுவது தமிழ்நாட்டின் கடமையா? அல்லது ..................

 

AMERICA

 
 
அமெரிக்கவைச் சார்ந்த Go4Guru ஆன்லைன் கல்வி நிறுவனம் தமிழ் வகுப்புகளை இலவசமாக துவக்குகிறது.
 
இந்த ஆன்லைன் வகுப்புகளுக்காக தமிழ் நாட்டில் பல அனுபவம் வாய்ந்த தமிழ் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆன்லைன் பயிற்சியளிக்கப்பட்டு உள்ளது.
 
ஆறு வயதிற்கு மேற்ப்பட்ட மாணவர்கள் இந்த வகுப்பில் சேர்ந்து பயன் பெறலாம்.
 
உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழ் கற்று கொள்ள இது ஒரு அறிய வாய்ப்பு. வெப் கேமிரா மற்றும் மைக் வசதிகளுடன் இந்த ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்கள் ஆசிரியர்களை பார்த்து பேசிக் கற்றுக்கொள்ள முடியும்.
 
இந்த வகுப்புகள் முற்றிலும் இலவசமானது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே இந்த வகுப்புக்களில் பங்கேற்கலாம் .
 
இந்த இலவச ஆன்லைன் வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் Go4Guru.com என்ற இணைய தளத்தில் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த தமிழ் ஆன்லையன் வகுப்புகள் மார்ச் 15ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.
 

தமிழ்நாடு

 
விஏஓ தேர்வில் பொதுத்தமிழ் நீக்கம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தமிழ்நாடு
 
அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வில் பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன.
 
பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு எழுதும் குரூப் 4 மற்றும் வி.ஏ,ஓ தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
முன்பு  பொதுத் தமிழ் பகுதிக்கு 100 வினாக்கள்  ஒதுக்கப்பட்டிருந்தன.
 
தற்போது புதிய பாடத்திட்டத்தின் படி, பொதுத் தமிழ் பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.
 
இதேபோல், குரூப் 2 தேர்வில், அனைத்து மதிப்பெண்களும் பொது அறிவுப்பகுதிக்கே ஒதுக்கப்பட்டுள்ன. குரூப் 4 தேர்வில் இதுவரை 100 வினாக்கள் பொது அறிவு பகுதிகளுக்கும், 100 வினாக்கள் பொதுத் தமிழுக்கும் ஒதுக்கப்பட்டது.
 
புதிய பாடத்திட்டத்தின் படி, பொது அறிவு, சிந்தித்து விடை அளித்தல், புத்தி கூர்மை உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். இதற்காக 225 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 50 வினாக்கள் மட்டுமே பொதுத் தமிழில் இருந்து கேட்கப்படவுள்ளது. இதற்காக 75 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


என் கருத்து இதில் ஏதுமில்லை. தமிழ் வளர்க் பாடுபடுவது தமிழ்நாட்டின் கடமையா? அல்லது ..................

Monday, March 11, 2013

INDIAN PRESIDENT - (Not a part time job)



ஆர்ம்பித்து விட்டோம்லே எங்கள் பயணத்தை



மொரிசீயஸ் நாட்டு தேசிய தின விழா நாளை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 3 நாள் பயணமாக இன்று காலை மொரிசீயசுக்கு புறப்பட்டுச் சென்றார்

சந்திர மண்டலம் போக அருகதை உள்ள
சனாதிபதியும் எங்கள் இந்திய ஜனாதிபதிதான்.

வாழ்த்துக்களுடன்

சந்தோஷ் 

Sunday, March 10, 2013

NRI's pl. listen, missed my city.

 PROUD TO BE FROM .......& MISSED A LOT

MY CITY TRICHY ROCK(s)......FORT CITY

 
 
 
 
என்னதான் கனடாவில் வாழ்ந்தாலும், நம் சொந்த ஊர் பாசம் நம் சதையை
 
ஆட்டுது இந்த பாடலை கேட்கும் போது    
 
 

 
 
 
 
 
 
 
என்றும் அன்புடன் 
 
சந்தோஷ் 
 
 
 

 

Saturday, March 9, 2013

ராணிமுகர்ஜியின் தமிழ் குத்தாட்டம்

 

 ஏன்டா நாங்களே சில்க் சுமிதா, ஜெயமாலினி எல்லாம் மறந்து,
 
 ஊர்மிளாவ அக்கடா துக்கடானு ஆட விட்டு,
 
 ஸகலக பேபினு சுஸ்மிதாசென்-னையும் ரசித்தா,
 
 உங்களுக்கு இன்னும் சில்க் மோகம் (அல்லது பாசம்) தீரலையா??
இல்லை  வெறும் வியாபார உத்தியா ??
 
 

இருந்தாலும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு 

 
 
















உங்களுக்கும் பிடிக்கும்-னு நிணைக்கிறேன்.
making of dreammum wakeupum சேர்த்து பார்த்திடுங்கள்.

என்றும் அன்புடன்

சந்தோஷ் 

Thursday, March 7, 2013

தர்மம் தலை காக்கும்

 

எனக்கு பிடித்த குறும்படங்களில்   இதுவும் ஒன்று. இதை பற்றிய விமர்சனம் விரைவில் 

 
 


மற்றும் facebookல் ரசித்த சில நல்ல போஸ்டர்கள் இதோ உங்கள் பார்வைக்கு 




 
 
 
 
 
 
 
மேலே உள்ள  இரண்டிலும்   இருக்கும்  உண்மை என்னை கவர்ந்து, 
 
 
 
நானும் ஹோட்டல் industryயில் இருப்பத்தால், இதை மிகவும் ரசித்தேன் 

 என்றும் அன்புடன் 

சந்தோஷ் 

Wednesday, March 6, 2013

காதல் கடிதம் 

வெளிநாட்டில் இருக்கும் எங்களின் துயரங்களில் இதுவும் ஒன்று 
 
காதலிகத்தான் கண்ணமா
கடிதம் இருக்குதடி 
 
கைகோர்த்து கதைக்க முடியாவினும் 
கைப்பேசியில் கதைக்கலாம் பெண்ணே 
 
சைட் அடித்த நேரங்களை விட 
skypeக்கு செலவிட்ட நேரங்களே  அதிகம்
 
 இதழின் சுவை ருசித்திட 
இணையத்தில் (இடம்) வசதி இல்லையே 
 
கண்களில் காந்தம் இருக்கோ 
கனவுகளை கவர்ந்து போகிறதே 
 
தோளில் சாய்ந்திடும் சுகத்தை 
தொலைவுகள் தொந்தரவு செய்கின்றதே
 
காலங்கள் இப்படியே போனால் - என் 
கம்ப்யூட்டருக்கும்  வருமோ பசலை .
 
 
 
இந்த கிறுக்கல் கவிதை  நான் டெல்லியில் இருக்கும் போது கிறுக்கியது, இப்பொழுது  சில மாற்றங்கள் உடன். உங்கள் கருத்துகளை பகிரவும்.
 
என்றும் அன்புடன் 
 
சந்தோஷ்  
 
 
 


Jasper ட்ரிபின் காட்சி


Jasper ட்ரிபின் காட்சி

எங்கள் ஜாஸ்பர் ட்ரிபின் ஒரு வீடியோ காட்சி உங்கள் பார்வைக்கு
இன்னும் பல வீடியோகள் -- பிறகு 

 




என்றும் அன்புடன் 
 
சந்தோஷ் 
 

Tuesday, March 5, 2013

எங்கள் ஊர்

நான் மிஸ் பண்ணும் விஷயங்களில் ஒன்று 
 


என்றும் அன்புடன்

சந்தோஷ்


நான் இரசித்த sms 


எனக்கு வந்த sms ஜோக்ஸ்களை  உங்களுடன்  சிலவற்றை பகிர்ந்துக் கொள்ளலாம் என்று 
 
 
முதலில் ஒரு குறள் 

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.

 
தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக. 
 
 
1. Once in a soap industry in America, the soap cover was mistakenly packed without soap in it i.e  an   empty cover.
To avoid the problem in future they purchased X-Ray machine of 60 thousand dollars to check in the assembly line that whether soap is packed in the cover or not in.

Same problem occurred in India
What did they do??
They simply put a pedestal fan beside the assembly line. Empty boxes were flown away! 

Genius Nation.

 
2.எனது அறிவியல் புத்தகத்தில் - நான் ஒத்துக்கொள்ளும் ஒரே விஷயம் 
 cell is the Basic fundamental unit of life
 
3.Question by a student !!
     If a single teacher can't
     teach us all the subjects,
    Then...
    How could they  expect a single student to learn all subjects ?

உண்மையான கேள்வி...

 
4. Universal TRUTH we learnt "sun rises in the east"
        Fact:- "sun neither rises nor sets, only earth rotates"
        Moral
               "Education spoils our commonsense"

 
5. HEIGHT OF BADLUCK

Boy: Marry me.. ?
Girl: Do you have a house.. ?
Boy: No..
Girl: Do you have a BMW car.. ?
Boy: No..
Girl: How much is your salary.. ?
Boy: No salary.. but,..
Girl: No but. You have nothing.. How can i marry you.?? Leave please.!!

Boy: (talk to himself) I have one villa,
3 property lands,
3 Ferrari, 2 Porsche..
Why I still need to buy BMW.?!
How can I get the salary when actually I'm the BOSS...

யாருக்கு BADLUCK?????????
 
 
6. அட ப்பாவி மனிதா 
நான் உன்னை எழுபினாலும் என்னை திட்டுகிறாய் 
எழுப்பாமல் விட்டாலும் (இன்னும் அதிகமாய் )திட்டுகிறாய் 
 
நான் என்னடா செய்ய 
இப்படிக்கு 
குழப்பத்திலிருக்கும் ALARAM CLOCK
 
7. ஆண்களுக்கான அறிவுறை 
நீ ஒரு பெண்ணை மணந்தால் - அவள் உன்னுடன் சண்டை போடுவாள் 
நீ இன்னுமொரு  பெண்னை  மணந்தால் - அவர்கள் உனக்காக சண்டை போடுவார்கள் 
 
மாத்தி யோசி ........... மச்சி 
 
8. இந்தியா வந்த Japanese டூரிஸ்ட் ஒருவர் டாக்ஸில் ஏறினார். வழியில் ஒரு Toyota காரை பார்த்து இது ஜப்பான் உற்பத்தி மிக வேகமாக செல்லும் என்றார்.
 
மீண்டும் ஒரு ஹோண்டா காரை பார்த்து இது அதை விட வேகமாக செல்லும்  - இதுவும் ஜப்பான் உற்பத்திதான் என்றார்.
 
அடுத்து ஒரு pradoவை பார்த்து இது அணைத்தைவிடவும் வேகமாக செல்லும் 
 - இதுவும் ஜப்பான் உற்பத்திதான் என்றார்.
அணைத்தையும் கேட்ட டிரைவருக்கு பெறுமை இழந்தவாரே காரை ஓட்டினார்.
 Japanese டூரிஸ்ட் சொன்ன இடம் வந்தும் டிரைவர் Rs 4000 என்றார்.
அதிர்ச்சியான Japanese டூரிஸ்ட் - ஏன் இவ்ளோ பணம் எனக் கேட்டார்?
 
கோபத்திலிருந்த  டிரைவர் - டாக்ஸி மீட்டர் இந்திய உற்பத்தி, இது மிக மிக வேகமாக செல்லும், உங்கள் கார்களை விட.
 
 
9. Girl: If v get married stop smoking.
    Boy: Ok!
    Girl: Drinking 2.
    Boy: Ok!
    Girl: and going to the nite club 2.
    Boy:-Yes..


    Girl:-What else can u leave??
     :
     :
     :
     :
    Boy:-  D idea of marrying u!!

 
    great escape...........
 
முடிவாக ஒன்று 

10, யார் சொன்ன பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாது என்று 
 
பணத்தால் சந்தோஷத்தை கண்டிப்பாக  வாங்க முடியும் 

சந்தேகம் இருந்தால் எனக்கு பணம் கொடுத்து பாருங்கள் 

நான்  எவ்வளவு சந்தோசம் அடைகின்றேன் என்பதை  பார்ப்பீர்கள். 
 
 
 என்றும் அன்புடன் 

சந்தோஷ் 

Saturday, March 2, 2013

Kadaisila Partha Kadhal (KPK) TAMIL SHORT FILM Kalaignar TV - Nalaiya I...


எனது காதல்  கதை 

 
 
இதை காணும் போது எனது  காதல் போலவே  உள்ள காதல் கதை இது என்பதலால் இதை பகிருகிரேன்  



என்றும் அன்புடம்
சந்தோஷ் 

Sombu - Tamil Comedy Short Film by Bad Boyz

நான்  இரசித்த குறும்படம் 

 
 

நான் இரசித்த குறும்படம் உங்கள் பார்வைக்கு

உங்களின் கருத்துக்களுக்கு காத்திருக்கும்





 என்றும் அன்புடன்

சந்தோஷ் 

Friday, March 1, 2013

இந்த கேள்விக்கு பதில் என்ன

 
 
 
இந்திய அரசு ராஜாவின் கேள்விக்கு பதில் சொல்லியே தீரவேண்டும். ஒவ்வொரு தமிழின் கேள்வி இது.




இதில் 1.40 முதல் 2.20 வரையில் ஆன ராஜாவின் கேள்விக்கு அவை தலைவர் கூறும் don't make blanket elongation .

  1. யார் இதை ஏற்பார்கள்.
  2. ஏன் இந்த ஏமாற்று வேலை.
  3. எந்த மீடியாவும் இதை ஏன் வெளிசத்துக்கு கொண்டு வரவில்லை.

பதில் எதிர்பார்த்து 
காத்திருக்கும் தமிழனில் - ஒருவன் 


சந்தோஷ் 



 




 என் பாட்டனுக்கு நன்றி   

 
முதல்  பதிவு என்பதால் திருக்குறளில் இருந்து துவக்குவது என்ற முடிவோடு,
 
ஒரு (முதல்) குறளின் அறிமுகத்தோடு,
 
 வள்ளுவரின் முதல் குறள்  தான்  எனது முதல் குறளும்.
 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
 
 
 
 எழுத்துகளுக்கு அகரம் முதன்மை, , உலகில்   வாழும் உயிர்களுக்கு ஆதி பகவன் முதன்மை.
  
 
இங்கு நான்  சொல்லவருவது எனது (நமது ) முன்னோரின் பெருமையை.
 
  உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கும் இடம் குமரிக்கண்டம். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இன்று நாம் பேசிக்கொண்டிருக்கும்  தமிழ் பிறந்தது சுமார்  இருவதாயிராம் ஆண்டுகளுக்கு முன்னால்.
 


உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.


எனவே  இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.
 
உலக மொழிகளுக்கு அணைத்துக்கும் நம் தமிழ் மொழி தான் - தாய்  மொழி என்று  வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
எதற்கும்  சான்று வேண்டும் அல்லவா - இதோ 



நன்றி,

என்றும் அன்புடன்

சந்தோஷ் .