More than a Blog Aggregator night writter

Tuesday, March 19, 2013

சின்ன  சின்ன  சந்தோஷங்கள் 
 
எல்லோரும் அவியல், துவையல் என்று செய்யும் போது,
நிஜ சமையல் கலைஞன் நான், ஏன் கூட்டாஞ்ச்சோறு  செய்யக் கூடாதென?
இதோ உங்களை இம்சிக்க  ...............

இந்த பதிவிலிருப்பதெல்லாம் நான் முன்பு எங்கோ படித்து ரசித்தவைகள்,

மற்றும் எனது சுய கன்னி முயற்ச்சிகளும் 
 

பொதுவான கருத்து 

 
இப்பொழுதெல்லாம்  குழந்தைகளுக்கு 
 உணவாக cerealதான்   கிடைக்கின்றன 
:
:
:
காரணம்  serial தானோ  .

 காதல் ஹைக்கூ 

 
நான்  அவளுக்கு ஐஸ்கிரீம் தந்தேன் 
அவள் உருகினாள்
நானோ உறைந்தேன்.

 

ஒரு சின்ன காதல் கதை


ராமுக்கு சீதையை முதல் பார்வையிலையே பிடித்து போனது.

அவளின் குரலுக்கு மயக்கினான்,
குழலுக்கு ஒப்பிட்டு.

அவளோடு சேர்ந்திருப்பதுபோல்
கனவு கொண்டான்,
காதல் வளர்த்தான்.

கனவு நிஜமாக
காதல் வளர, குழந்தைகள் பெருக
குடும்பமாய் கொண்டாடினான்.

அந்த காதல்
அவனை இட்டுச் சென்றது
அகமும் புறமும் அழகாக,

திடுமென ஒரு நாள்

துயரம் வந்தது
துணையாக கூரியரை அழைத்துக்  கொண்டு.

விவாகரத்து கடிதம்
விழிப்பை தந்தது,

நிஜ வாழ்கை
நித்திரையின் கனவுப் போல்...

சுகமானதல்ல என்பதை
சொல்லியப்படி.

Divorce judgment day,
It was a success...............
but still a failure.

ஒரு இளைஞனின்  புலம்பல் 


When I called her, her phone was engaged.
When I met her, she was engaged.


ஒரு சின்ன கற்பனை 


இன்றைய தமிழ்நாட்டின் current situation 


vacuum cleanerகள்  இப்பொழுது அறிமுகமானால் .........

ஒரு விற்பனையாளர் ஒரு வீட்டுக்கு சென்று கதவைத் தட்டினார். கதவைத் திறந்த மூதாட்டி சொல்ல வந்ததை கேளாமல் பிளாஸ்டிக் பையிளுள்ள சாணத்தை   தரையில் கொட்டி...
பெருமிதமாய் 
 
"நான்  இதை எனது vaccum cleanerரைக் கொண்டு சுத்தம் செய்யாவிட்டால் 
 
நானே இதை சாப்பிடுக்கின்றேன்" என்றார் ஆர்வமாய்.
 
மூதாட்டி "உனக்கு தொட்டுக் கொள்ள ஏதேனும் தேவைப்படுமா" என்றார் அமைதியாக.
 
ஏன் என்ற  விற்பனையாளருக்கு, எங்கள் வீட்டில் கரண்டில்லை, கரண்ட் வர இன்னும் 14 மணி நேரமாகும் என்றார்.
 

கதையின் நீதி :

 
கமெண்டில்  உங்களுக்கு பிடித்த நீதியைச்  சொல்லவும் 
 
1 - எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
     எண்ணுவம் என்பது இழுக்கு.
 
2 - முடிப்பது எப்படி என்று தெரிந்தப்  பின்னே
      ஒரு செயலைத்  துடங்குவது என்பது சால சிறந்தது 
 
3 - ஆழம் தெரியாமல் காலை விடாதே 
 
 
 
 

     கஞ்சனின் கடைசி ஆசை 

 
ஒரு கஞ்சன் வாழ் நாள் முழுவதும் தான் சம்பாதித்த காசையெல்லாம் செலவு செய்யாமல் சேர்த்து வைத்தான்.
 
காசை தவிர வேறு எதையும் நேசிக்காத அவன், தன் மரணப் படுக்கையில் தனது மனைவியை அழைத்து, எனது கடைசி ஆசையை நீ தான் நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி,
"நான் சேர்த்து  வைத்த காசையெல்லாம்  என்னுடன் புதைத்து விடு" என்றான்.
 
சம்மதித்த மனைவியும் அவ்வாறே செய்தாள்.
 
கூட இருந்த உறவினரும், நண்பர்களும் "ஏன் இப்படி செய்தாய், நீ என்ன முட்டாளா?" என்றனர்.
 
அதற்கு மனைவி "நான் அவர் கடைசி ஆசையை நிறைவேற்றினேன், அதே நேரம் எல்லா பணத்தையும் எனது பேங்க் அக்கௌண்டில் போட்டு விட்டேன், அதற்கான என் கையெழுத்து இட்ட chequeகை தான் அவருடன் புதைத்தேன் என்றார்.
 

கதையின் நீதி :

 
1 - உங்களுக்கு தெரியாததா ...........
 
 
 
 
மற்றும் என் ஆல் டைம் favourite song 
டி ஆரின் ரசிகன் என்பதால் மட்டும் அல்ல 
இந்த வரிகளுக்கு இணையாய் 
வேறு எதை சொல்ல 
 
 
 
 
 
என்றும் அன்புடன் 
 
சந்தோஷ் 
 
 

No comments:

Post a Comment