More than a Blog Aggregator night writter: May 2013

Saturday, May 25, 2013

ஆறு மனமே ஆறு


மனம் ஆறவில்லை அவரின்
மறைவையரிந்து.

உள்ளம் உருகுதய்யா 

உள்ளம் துடித்து, உருகுது அவர்
உயிருடன் இல்லையென்பதரிந்து

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் 

இந்த அருளை  முருகன்
அந்த மாபெரும் கலை மேதைக்கு
அருளி  - ஆட்கொள்ள

வேண்டிக் கொள்ளும் கோடான கோடி
ரசிகர்களில் ஒருவன்

சந்தோஷ்

கடந்த  இரண்டு வாரங்களில் பல மோசமான நிகழ்வுகள் நடந்தேறினே,
அவை எல்லாம்  விலாவாரியாக  விரைவில்........

Wednesday, May 8, 2013

நடிகை ரம்பா -- பொது வழியில் சொல்லக்கூடாத விஷயம் 

(கனவுக் கண்ணிகளில் ஒருவர்)

 
நாம கற்பனை பண்ண உருவத்தில் 80% ஒத்துப் போற மாதிரி ஒரு பெண்ணைப் பார்த்தாலே --- அது நம்ம ஆளுன்னு முடிவுக்கு வந்துடுவோம்,
 
ஆனா நான் கற்பனைப் பண்ணதில் 99% முழுசாய் வந்து நின்ன ஆளுத் தான் ரம்பா.
இத்தனைக்கும் நான் ரம்பாவைவிட வயதில் சின்ன பையன். இருந்தாலும் தீவரமாய் ரம்பாவை ரசிக்க --(ரசிக்க மட்டும்) ஆரம்பித்தேன்.
 
"அவள் எது எது சொன்னாலும் கவிதை "
என்பது போல் ரம்பா எந்த படம் நடித்தாலும் தேடிப் போய் பார்ப்பேன்.
 
விஜயலஷ்மி, அமிர்தா என்று பெயர்க் கொண்ட பெண்களையும் ஒரு முறைக்கு பல முறை பார்த்து வழிந்திருக்கின்றேன்.
 
இன்னைய தேதி வரைக்கும் என் மனைவி உள்பட, என் தந்தை,தாய், தம்பி அனைவரும், ரம்பாவின் பாடல்  டிவியில் வந்தால் 
 
"சந்து, உன் ஆளு பாட்டு போவுது வரீயா"
என்று கிண்டலோடு அழைப்பதைப் பெருமையாய் ஏற்று போய் பாடலையும் ரம்பாவையும் ரசிப்பேன்.
 
என் 14 வயதில், என் தந்தை நான் சேகரித்து வைத்திருந்த  ரம்பாவின் போட்டோவை எல்லாம் எடுத்து தீயிக்கு இரையாக்கினார்.
"பிஞ்சிலேயே பழுத்திருக்கு பாரு"  ___  என்ற commentடோ,
அவருக்கு தெரியாது நான் ஸ்ரீதேவி,ஸ்ரீப்ரியாவை க் கூட sight அடித்தேன் என்று.
 
ரம்பா கூட வந்த சிம்ரன், ஜோதிகா, லைலா, ரோஜானு  எல்லோரையும் எனக்கு பிடிக்குமுனாலும் ரம்பா இஸ்  ஸ்பெஷல் for  me.
 
எங்கள் நண்பர்கள் வட்டத்தில் ரோஜா சிறந்த டான்சரா? ரம்பா சிறந்த டான்சரா? என்ற வாதம் வரும் போதெல்லாம் ரம்பா மட்டும் பிரபுதேவாவுடன் ஒரு படம் நடிக்கட்டும் அப்பத் தெரியும் யார் சூப்பர் டான்சருனு- சொல்வேன்.
 
அதுக்கு தகுந்தார்போல் v .i .p படத்தில் பிரபுதேவாவுடன் என் தலைவி போட்ட ஆட்டம் சான்சே இல்லை

 
 
அது மட்டுமா அந்த படத்தில் ரம்பா " சந்தோஷ் i  love  you " னு  சொல்லும் வசனத்துக்காகவே collage  கட் பண்ணிட்டு 15 தடைவைக்கும் மேல் பார்திருக்கின்றேன்.
 
நான் படித்தது பாய்ஸ் ஸ்கூல் என்பதாலையே, எங்கள் வட்டத்தில் லவர் இல்லை என்றாலும் சைட் அடிக்க ஒரு பெண் கண்டிப்பாய் இருக்க வேண்டும். இல்லை என்றால்
அவன் ஜீரோ தான்..............
 
  என்னைப்  போல.........
 
 
 கலைஞரின் அருளால் பஸ் பாஸ் கொடுத்த நேரம் வேறு
 எனவே girls ஸ்கூல் பொண்ணுங்களும், நாங்களும் D.T .D .C  அரசு பேருந்தில் மட்டுமே பயணிப்போம்.
 
முழு நேர பணியாய் 
மூச்சடக்கி முத்தெடுப்பதுப்  போல் 
நேர்மையுடன் காதலித்தாலே 
 
ஒரு புன்னகையோ அல்லது
ஒரு கடைக் கண் பார்வையோ  
மட்டும் கிட்டும் 
எனும் போது நான் எல்லாம் எங்க போவது?????
 
 
எல்லோருக்கும் sight அடக்க ஒரு பிகரோ
அல்லது  
ஒரு காதலியோ இருக்க ..............
 
இருக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் 
 
நான் மட்டும் தணித்து விடப் பட்டேன்.
 
நண்பர்கள் என்னிடம் "உன் ஆளு யாரு? "என்று கேட்டப் பொழுது நான் முழிப் பிதுங்கி நின்றேன் .........
 
ரம்பா தான் என் ஆளு அவளை தவிர வேறு பெண்ணை நான் பார்பதில்லை என்று சொன்ன போது 
 
ஜீரோவில் இருந்து ஹீரோவாக மட்டுமில்லை சூப்பர் ஸ்டாராக உயர்ந்தேன் 
 
இப்படி infatuation (அறிவற்ற மோகம்) னில் இருந்து என்னை காப்பாற்றியது ரம்பா தான்.
 
ஆனாலும்
முழு சாப்பாடு சாப்பிட்ட பின்னுமும்
வயிறு முட்டி தொண்டை வரை வந்த பின்பும் 
பாயசம் என்றால் இடம் கொடுக்கும் 
உடல், குடல் போல 
 
வந்த தேவதை தான் ...........என் காதலி 
என் மைதிலி 
 
 
 
என் மனைவி 
 
அது வரை தெரியாது நான் 
சாப்பிடவே  வில்லை 
 
உணவை (ரம்பா ) பார்த்து மட்டுமே இருக்கின்றேன் என்று 
o .k . அது வேறு கதை
 
ரம்பாவின் சாதனைகள் என்றால் அஜித்,விஜய், ரஜினி,கமல் என்று எல்லோரோடும் நடித்த நடிகை 
 
கவர்ச்சி,நடிப்பு,நடனம்,என்று எல்லா ஏரியாவிலும் சிறந்த நடிகை என் கனவு கண்ணி என் தலைவி ரம்பா என்றால்
 
 
யார் இல்லை என்று சொல்வார்??????????????.
 
 
என் வயது ஒத்த த்ரிஷா, senha , னு  பலர் இருந்தாலும் ரம்பா என்னை அதிகம் அவர் பக்கம் இழுத்தார் என்பது 100% உண்மை.
 
பின்ன வந்த நடிகைகளில் அஞ்சலி தான் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறார்.

என்றும் அன்புடன்

சந்தோஷ் 
 
 
 


Friday, May 3, 2013

டி ஆரின்  

நான் முதலில் ரசித்தது டி ஆர் தான் 

இது ஜோக் பதிவல்ல. டி ஆரின் ரசிகன் என்பதில் எப்பொழுதும் பெருமைக் கொள்ளும் ஒரு சராசரி ரசிகனின் பதிவு.
 
நான் u .k .g  மற்றும் முதல் வகுப்பு படித்தது செய்யாரு (வடஆற்காடு ) பெரியம்மா வீட்டில் .
 
அப்பொழுது ஒரு நல்ல திருநாளில் என் அண்ணன் ரவி  "ஒரு தாயின் சபதம்"  அழைத்துச் சென்றார்.

அண்ணன்களின் விருப்பமமே தம்பிகளின் விருப்பமாய் 80% ஆவது இயற்கை. அது வரையில் ரஜினி தான் எங்கள் இருவரின் அபிமான ஹீரோ. ஒரு தாயின் சபதம் பார்த்த பிறகு நான் டி ஆரின் ரசிகனாய் மாறினேன்.
 
எனது அண்ணனை வம்புக்கிழுப்பதற்காகவே உனது ஹீரோ ரஜினியை எனது தலைவரிடம் வரச் சொல் அவர் கம்பியில் சுற்றி.... சுற்றி...., சும்மா, பறந்து....பறந்து...... அடிப்பார் என்று முதன்முதலாய் கருத்து வேறுபாடு மற்றும் ரசனை வேறுபாடும் உருவானது.

சண்டைக்காக மட்டுமே டி ஆரை ரசித்த நான் அதே அண்ணனின் வழிக்காட்டலில் எனது பதின் பருவத்தின் துவக்கதில்         டி ஆரின் பாடல்களின் அர்த்தம் விளங்கியது.
 
மற்றும் என் தந்தையின் - t .d .k . cassestலில் டி ஆரின் பாடல்களை national taperecord ரேடியோவில், அந்த காஸ்செஸ்ட் தேய தேய கேட்டு மகிழ்ந்த காலம் எல்லாம்  சொர்க்கம் என்றால் மிகையல்ல.
 
டி ஆரின் வரிகள் மற்றும் உவமைகளை  - இனி டி ஆரே நினைத்தாலும் வெல்ல முடியுமா என்பது கேள்விக்குரிய?????????????
 
காதல் வசபடாதவனையும் காதலின் சோகம் மற்றும் காதலின் வலியை அரியச் செய்தவர் டி  ஆர்                                           உதாரணமாய் 
 
வாசமில்லா மலரிது 
வசந்தத்தை தேடுது
வைகையில்லா மதுரை இது 
மீனாட்சியை தேடுது 
 
இந்த உவமை  யாரால் எழுத முடியும் 
 
என் தலைவன் டி  ஆரைத் தவிர 
அது மட்டுமா ?
 
 
நான் ஒரு ராசியில்லா ராஜா 
என் வாசத்துக்கு இல்லை இது வரை ரோஜா 
 
 
பாட்டிசைக்க மேடைக் கண்டேன் 
ராகங்களைக் காணவில்லை 
 
பலர் இழுக்க தேரானேன் 
ஊர்வலமே நடக்கவில்லை 
 
என்று போகும் பாடல் ஓர் இடத்தில் 
 
தோல்விதனை எழுதட்டும் வரலாறு 
துணைக்கென்று இனிமேல் யார் கூறு 
 
என்று முடியும் போது 
காதலை,
 
காதலின் வலியை இதைவிட எளிதாய்,
அதே நேரம் வலியாய்  சொல்ல  
எவனால் முடியும்,
 
 என் தலைவன் டி ஆரை தவிர 
 
இது மட்டுமா காதலிக்கின்ற பெண்ணை போற்றி புகழ,
 
அவளை 
அணு அணுவாய் ரசிக்க 
 
தடாக்கத்தில் மீன் இரண்டு
காமத்தில் தடுமாறி
தாமரை பூமீது வீழ்ந்தனவோ

இதைக்   கண்ட வேகத்தில்
 பிரமனுமும் மோகத்தில்
படைத்திட்ட பாகம் தான்
உன் கண்களோ

என்று சொல்லும்போது யார் தான் டி ஆரை ரசிக்கமால் இருக்க முடியம்

 
இது sample தான்

எவ்வளவோ விஷயம் இருந்தாலும், டி ஆர் என் தலைவன் என்பதில் பெருமைக் கொள்ளும் ஒரு

சராசரி ரசிகன்

என்றும் அன்புடன்
சந்தோஷ்