More than a Blog Aggregator night writter: ஓர் உண்மை சம்பவம்

Monday, July 22, 2013

ஓர் உண்மை சம்பவம்

  அனாதை ஆனேன் கனடாவில் (ஓர் உண்மை சம்பவம்)


May 9 ல்   நான்  குடியிருந்த  வீடு தீயிக்கு இரையானது (அது ஒரு கருப்பு வியாழன் - 45 குடும்பங்களுக்கு), 12 மணி நேர வேலை (விடியற் 5 முதல் மாலை 5)  முடித்து வந்த நான் அசதியில் தூங்கி  போனேன்.

  புகை நாற்றமோ அல்ல நெருப்பின் வெப்பமோ  அல்லது முன்னோர் செய்த புண்ணியமோ  எதோ ஒன்று என்னை எழுப்ப
 எழுந்து பாரத்த போது வீட்டு பால்கனி எரிவதையும் , பின்னால் fire அலாரம் அடித்ததையும்  மூளை உள் வாங்கும் முன்னரே--- மனமோ?, அறிவோ?, மீண்டும் - எதோ ஒன்று என்னை எச்சரித்தது ---" முதலில் வெளிவேறு"  என்று.

பனியனும், நைட் பேண்ட்டுமாய் வெளியே வந்த நான், பின் தான் உணர்ந்தேன் எனது 1200$ மதிப்புடைய லேப்டாப், டாகுமென்ட், tax return form, certificate, மற்றும் எதையும் எடுக்கவில்லை என்று.


ஆனாலும்  பாஸ்போர்ட் , work பெர்மிட் இரண்டும் என் தலையணைக்கு அடியிலிருந்ததால் எடுக்க அவகாசமும், சுவாசமும் கிடைத்தது.


நான் இழந்தது அனைத்தையும் என்றாலும் இழக்காதது நம்பிக்கையை மட்டும்.  யாருமற்ற ஊரில் அனாதையாய் நின்றேன் .

போனிருந்தும் அதில் சார்ஜ் இல்லை.

கண்முன்னே வீடு மற்றும் அனைத்து  சேமிப்பும்  எரியும் போது ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எப்படி என்னுள் வந்தது??????????????

                                                                          


 சிறு சோகமோ, அல்லது அழுகையோ வரவேயில்லை.  இரவு தங்க இடமில்லை, மறுநாள் என்ன செய்வது என்று தெரியவில்லை.  


என்னால் முடியும் என்ற நம்பிக்கை.

இழந்தது பொருளை தான் , அதை மீட்டுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை என்னுள்  இருந்தது.

அப்பொழுது தான் சந்தீப் என்ற இந்தியனை பார்தேன். மொத்த பழக்கமே - 15 நிமிடங்கள் பொதுவாய்   பேசி இருப்பேன்  . 

நான் பனியனோடு குளிர்  காற்றில் அவதி உருவதை கண்டு, அவரின் ஜெர்கின்   தந்து உதவினார், அது அளவில் மிகவும் சிறியதாய் இருந்தாலும், அது அப்பொழுது என்னை குளிர்க் காற்றிலிருந்து காப்பாற்றியது.     motel 6ல் மே 9 இரவு எஞ்சிய பனியன், அசாத்திய நம்பிக்கை, சோகத்தை அண்ட விடாத புன்முறுவலுடன்.

இதை தானே   நம்  பாட்டன் திருவள்ளுவர் 

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

என்று உரைத்தார்.

இந்த சம்பவம் எனக்கு  பல நல்ல உள்ளங்களையும், சில சுயநல மற்றும் மனதில் பகை கொண்டு உதட்டில் சிரிக்கும்  எண்ணம் கொண்ட சிலரையும் காட்டிக்கொடுத்தது. 


 இங்கு நண்பர்கள் என்ற போர்வையிலிருந்த கயவர்களின் சுயநல எண்ணங்களையும் , வஞ்சக செயல்களையும் அவர்களின் தகாத வார்த்தைகளையும் நான் பகிரவோ அவைகளை மீண்டும் நினைவில் கொள்ளவோ விரும்பவில்லை. கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்பதற்கேற்ப பல நல்ல விஷயங்களை மட்டுமே பகிர்வும், மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ளவும் விரும்புகின்றேன்.


canadian legion பாதிக்க பட்ட அணைவருக்கும் மிகவும் துரிதமாய் உதவிகள் செய்தனர். மறுநாள் ரெட் கிராஸ் அமைப்பின்ர்களும் உதவிட, என் நம்பிக்கை மேலும்  துளிர்விட்டது. 

என் உடன் வேலை பார்க்கும் Dan என்ற Canadian விவரமறிந்து எனக்கு கால் பண்ணினான். அவன் no. என் வசம் இல்லாததால் 3 முறை நான் எடுக்கவேயில்லை. விடாமல் கால் செய்த அவன் - ஒரு மெசேஜ் அனுப்பினான். அவன் என் நிலைக்கு வருந்துவதாகவும், அவனால் முடிந்த உதவிகள் செய்ய தயாராய் இருப்பதாகவும் தெரிவித்தான். பின்னர் நான் கால் செய்து கால் அட்டெண்ட் பண்ணாமைக்கு மன்னிப்பு கேட்டு, என் நிலமையை சொன்னேன். 3 நாட்களுக்கு motel 6ல் ரெட் கிராஸ் அமைப்பினர் தங்க உதவி செய்துள்ளார்கள் என்றும் பின்னர் தங்க இடம் தேடிக் கொண்டுள்ளேன் என்று விளக்கினேன்.


அதற்கு அவன் "தானும் தனது கேர்ள் friend டபுள் பெட் ரூம் apartment டில்  தங்கி உள்ளதாகவும் - நான் விருப்பபட்டால் அவர்களுடன் தங்கிக் கொள்ளலாம்" என்று சொல்லி வயிற்றில் பாலை வார்தான். 


அவனுடன் தங்கியிருந்த நாட்களில் விருந்தோம்பல் செய்து, மனதை உருக்கி அதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தான் Dan. அவன் கேர்ள் friend எனக்காக புது மெத்தை, தலையணை மற்றும் எனக்காகவே பாஸ்மதி அரிசியும் வாங்கி வந்து தந்தாள். எதற்கும் காசோ, ஏன் நன்றியை கூட எதிர்ப் பார்க்கவில்லை. அவர்களுக்கு என்றும் நன்றியும், கடமையும் பட்டுள்ளேன்.


எதற்கும் கண் கலங்காத நான் கண் கலங்கிய சம்பவம் நடந்தது மே 10ல் -
 

ரெட் கிராஸ் அனைவருக்கும்  புது டிரஸ் மற்றும் மிகவும் அத்தியவச பொருட்கள் வாங்கிக் கொள்ள, வால் மார்ட் கிப்ட் வௌசெர் தந்தனர். நானும் சிமி என்கின்ற nigera கனடியனும், இருவரும் எங்களுக்கு  தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வெளிவரும் சமயம் - ஒரு பெண்மணி trolley முழுவதும் பொருட்களுடன் அங்கிருக்கும் செக்யூரிட்டியிடம் எதோ வினவ, சிமி அவர்களிடம் சென்று தனக்கு தெரியும் என்று சொல்லி, அவன் பொருட்களை என்னிடம் தந்துவிட்டு அவரின் trolleyயை வாசல் நோக்கி தள்ளி சென்றான், நாங்களிருவரும் பின் சென்றோம்.  வெளிவரும் வாசலின் மையமாய் 2 மிக பெரிய பெட்டிகள் இருந்தன. அப்பொழுது தான் நான் கவனித்தேன் அதிலிருந்த ஸ்டிக்கரை -- "DONATIONS FOR STONY PLAIN FIRE VICTIMS" என்றிருந்தது. 
(குறிப்பு- வால் மார்ட் இருப்பது spruce grove என்னும் எங்களின் பக்கத்து ஊர், மட்டுமின்றி வால் மார்டின் ஸ்பீக்கரில் 10 நிமிடத்துக்கொருமுறை இந்த செய்தியை சொல்லி donation வரவேற்க படுகின்றது என்னும் awareness கொடுத்த வண்ணமிருந்தனர்.)

சிமியும் நானும் அந்த தாய் உள்ளம் கொண்டவரிடம் trolley முழுவதும் பொருளாய் இருக்கே?  இதில் எதை எல்லாம் donation பாக்ஸ்சில் இட வேண்டும், என்று சொன்னால், நாங்கள் அதனை எடுத்துப் போட உதவுவதாக கூற, அப்பெண்மணி மேலே இருக்கும் 3 பைகளை தவிர மற்ற அனைத்தும் என்று கூறினார். பொருட்களை எடுத்துப் போட்ட வண்ணமே நாங்களிருவரும் அந்த fire victims என்பதை தெரிவிக்க (எனக்கு கண்கள் கலங்கியிருந்தது ) அவர் எங்களை கட்டி அணைத்து கலங்க வேண்டாம் என்றும் இன்னும் தன்னைப் போல் நிறைய பேர் உதவ காத்திருப்பதாகவும் கடவுள் எங்களுக்கு உறுதுணையாய் இருப்பார் என்றும் கூறினார் இல்லை என்னை பொறுத்தவரை ஆசிர்வதித்தார். 

அவர் தனக்கு என்று வாங்கிய பொருட்களின் விலை 30$ ருக்கு இருக்கும் ஆனால் donationனுக்கு போட்ட பொருட்களின் விலை 150$ ருக்கு மேல் தான் இருக்கும். 

அது மட்டுமில்லை stony plain canadian legionனுக்கு வெள்ளி கிழமை காலை 7 மணி முதலே spruce grove, park லேன்ட், மற்றும் stony plain மக்களும் donation தந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் வேலைக்கு லேட்டாய் போவதை கூட பெரிது படுத்தாமல் அரை மணி நேரம் பயணித்து வந்து கியூவில் நின்று donationகளை தந்து சென்றனர்.  

இங்கே ஜாதி, மதம், இனம், நாடு, என்று எந்த பேதமும் துளியுமில்லை. தன் சக மனிதன் அனைத்தையும் இழந்து நிற்கின்ற போது தன்னால் ஆன மிக சிறிய உதவி என்றே எண்ணினர். 

நான் எனக்கு ஒரு போர்வையும், டூத் brush, பேஸ்ட் மட்டும் எடுத்துக் கொண்டு சிமிக்காக காத்திருந்தேன். அப்பொழுது ஒருவர் legion staff என்னிடம் வந்து, எதற்கும் தயங்காமல் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு பணித்தார், இது உங்களுக்கான உதவியல்ல உரிமை என்றும் - தயக்கம் வேண்டாம் என்றும் சொன்னார், நான் தான்,  அளவுக்கு மீறி எனக்கு எதுவும் வேண்டாம், குழந்தைகளுடன் இருக்கும் குடும்பங்களுக்கு இது தேவைபடும் என்று சொல்லிவிட்டேன். 

 
 இன்று ஜூலை 22 
நண்பனின் லேப்டாபில் இதை பதிவேற்று கின்றேன். எங்களுக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் . காலமும் விதியும் என்னிடமிருந்து எடுத்ததை, அவையே பல் மடங்காய் பல நல்ல உள்ளங்கள் மூலம் திருப்பிக் கொடுத்தது.

எனக்கு உதவிய Dan, Justine, பீட்டர், பார்க் லேன்ட் neighbour வூட் லிங்க், ரெட் கிராஸ், கனடியன் legion, மற்றும் முகம் தெரியாத, பெயர் தெரியாத பல நல்ல உள்ளங்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி மறப்பது நன்றன்று ​​​ ___ என்ற பாட்டனின் சொல்லை நினைவில் கொண்டு. நீங்களும் அந்த நல்ல உள்ளங்களை மனதார வாழ்த்தினால் அதுவே அவர்களை இன்னும் வாழ்க்கையில் மேலே இட்டு செல்லும் என்ற நம்பிக்கையுடன் 

சந்தோஷ் .