More than a Blog Aggregator night writter: வெங்காயத்தின் கதை

Thursday, February 20, 2014

வெங்காயத்தின் கதை

இது பெரியார் சொல்லும்  வெங்காய கதை அல்ல.

பல  நூற்றாண்டுக்கு முன்பு,  மனிதன் தோட்டம் வைத்து  செடிக் கொடிகளை வளர்க்க  ஆரம்பித்த நேரம்.
 வெண்டை, கத்திரி, வெங்காயம், புடலைனு பல செடிகளை வளர்த்தான்.




எல்லாம் நல்லா  வளர்ந்து பூவாய், காயாய் பூத்து குலுங்கியது. ஆட்டை  வளர்பது ஆசைக்கில்லை என்பது போல - முதல் நாள் வெண்டைக்காயை அறுவடை செய்தான். அதுவரை தன்னோடு வளர்ந்த வெண்டைகாக,  மத்த செடியெல்லாம் அழுது புலம்பியது.
 மறுநாள் புடலையின் அறுவடை - கத்திரி, தக்காளி எல்லாம் புடலை க்காக அழுதது .
இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செடியின் அறுவடையின் போதும் மற்ற செடிகள் கண்ணீர் விட்டு அழுதது.


கடைசியாய் மிஞ்சிய வெங்காயம் மட்டும் மற்ற நண்பர்கள் பிரிந்த சோகம் தாண்டி, தனக்காய் அழுவ யாருமில்லையேன்னு - இறைவனை வேண்டி அழ ஆரம்பித்தது.

கதையின் முதலிருந்தே வெறும் அழுகையாய் இருக்க, இறைவனும் வெங்காயத்தின் மேல் கருணை கொண்டு "என்ன  வரம் வேண்டும் கேள் தருகிறேன்" என்றார்.

கிளைமாக்ஸில் ஹீரோ வில்லனை பழி வாங்குவது போல வெங்காயமும்  
"தங்களை ஆசையாய் வளர்த்தவனே கழுத்தறுத்து விட்ட படியால் அவனை வஞ்சம் தீர்க்க வேண்டும், மற்றும் ஒவ்வொருவரின் சாவுக்கும் மற்றவர்கள் கண்ணீர் சிந்தினார்கள், ஆனால்  என் சாவுக்கு யாருமில்லையே .எனவே என் சாவுக்கும் யாரேனும் கண்ணீர் சிந்த வேண்டும்" என்றும் வரம் கேட்டது.

இறைவனும் அதில் நியாயம் இருப்பதால் இரண்டு வரத்தையும் மனிதன் மேல் ஏவி வெங்காயத்தை வெட்டும் போதெல்லாம் கண்ணீர் சிந்துவான் என்றார்.

இப்ப புரிதா நாம  ஏன் வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் சிந்துரோமுனு :)))

4 comments:

  1. night writter <> spelling சரியா - கொஞ்சம் குழப்பமாக இருக்கு

    ReplyDelete
    Replies
    1. blog ஆரம்பிக்கும் போது அந்த வார்த்தையை எடு, இந்த வார்த்தையை போடுனு, கொடுத்த suggestion படி போட்ட spelling அது.

      Delete
  2. கதையாக இருந்தாலும் சிந்திக்க வைக்கிறது.
    வாழ்த்துக்கள் , ஐயா.
    <> கே.எம்.அபுபக்கர் ,
    கல்லிடைக்குற்ச்சி

    ReplyDelete