More than a Blog Aggregator night writter: பழமொழியில் சில சில்மிஷ மொழிகள்

Tuesday, November 4, 2014

பழமொழியில் சில சில்மிஷ மொழிகள்

பழமொழி 

பழமொழிகள்  பல மொழிகளில் இருந்தாலும் தமிழ் மொழியில் இருப்பது போல வராதுனு நண்பன் ஒருவன் சொன்னான். அது உண்மை என்று  உணர, முதல எனக்கு,  பல மொழிகள்  தெரிந்திருக்கனும், அல்லது பல           பழமொழியாவது (தமிழில்) தெரிந்திருக்கனும். 

இரண்டு இல்லாத இரண்டுகெட்டானாய் முழிப்பதுக்கு பதிலா - அவன் முழி பிதுங்குமளவு அவனை மடக்க எண்ணி 

ஆமாம் பழமொழிக்கு ஏன் பழமொழினு பெயர் வந்தது? னு கேட்டேன்.

"பழமையான மொழி அல்லது சொற்தொடர்னு, அர்த்தம் அமைய வைத்திருப்பார்கள்" னு சின்ன சந்தேகம் தோணிக்கும் வகையில் சொல்ல 

அடடா ஆடு சிக்கிடிச்சி, விட கூடாதுனு 

"எனக்கு என்னவோ பழமொழிக்கு பழமொழியை விட பலமொழிங்கிறது தான் சரியா வருமுன்னு தோணுது"  னு ஒரு கொக்கிப்  போட 

எப்படினு நான் எதிர்பார்த்த அதே கேள்வியை கேணையன் கேட்க (என் நண்பன் என்னைப் போல் இல்லாமல் வேறு எப்படி இருப்பான்) 

பல அர்த்தங்கள் கொண்ட
பல விஷயங்களுக்கும் பொருந்த கூடிய, 
பல பேருக்கும் தெரிந்த, 
பல வித மக்களுக்கும் புரியும் வகையிலும், பொருந்தும் வகையிலும் இருப்பதால்
பழமொழியை விட இப்படி பல  பல கள் வரும் மொழியை 
பலமொழி என்று சொல்வதே சரினு  சொல்லி முடிக்கும் போதே  

பேயறைந்தது போல் பேந்த பேந்த முழித்துக் கொண்டே 'தான் எதற்கும் தமிழ் அகராதி  போய் பார்த்துட்டு வந்து சொல்லுறேன்' னு  எஸ்கேப் ஆக போனவனை மடக்கி 

தமிழ் அகராதியிலே - தமிழ் மொழியின் பழமொழிக்கு - பழமொழி, பலமொழி என்பதை விட பளமொழி தான் சரியான சொல் என்றிருந்தால் என்ன பண்ணுவேனு  கேட்டேன்.

பளமொழினு எப்படி இருக்கும் - பல் 
இளிக்க முயன்றவனை பாதியில் நிறுத்தி,

"பளிச்சிடும் விளக்கங்களுடன் பவளம் போல் 
பள பள வென பளக்கும் விதமாய் அமைந்த மொழிகள் தான் பழமொழிகள் எனவே அதை பழமொழி என்றும்  பலமொழி என்றும்  சொல்லாமல் பளமொழி என்று தான் சொல்ல வேண்டும் என்று இருந்தால்" 

என்று சொல்லி முடிக்கும் முன்னே மயங்கி விழுந்துட்டான் மடையன்.

அறுக்க மாட்டான் சூத்தில் 
ஆயிரத்தெட்டு 
அரிவாளாம் னு எங்க பாட்டி 
அடிக்கடி சொல்லும் 

நாகரிகமாக சொன்னா சூத்துக்கு பதிலாய் இடுப்பில்னு சொல்லலாம் 

ஓர் பழமொழி கூட முழுசா தெரிந்துக் கொள்ளாமல் நான் அடிச்ச அல்லது அடிக்க வைத்த அந்தர் பல்டிய பார்த்தா 

எங்க பாட்டி  -  மேல சொன்ன பழமொழிய  தான் சொல்லும். 

No comments:

Post a Comment