செய்யும் தொழிலே..............
அனைவருக்கும் அவரவர்தம் தாயே தெய்வமாய், தோழியாய், வழிக்காட்டியாய் இருப்பாள்.
அவர்களின் தாய் மொழியே சிறந்ததாய், சிறப்புடையதாய் இருக்கும்.
அவர்களின் தாய் நாடே உயர்ந்த்தாய் இருக்கும், அயல் தேசங்களில் பஞ்சம் பிழைத்தாலும், தாய் நாட்டு உணர்வும் மோகமும் போகாது.
அதைப் போல தான், தாங்கள் செய்யும் வேலையின் மீதும் ஒவ்வொருவருக்கும் காதலும், ஊடலும் இருக்கும். அதற்கு நானும் விதிவிலகல்ல.
நான் செய்யும் தொழிலை ரசிக்க இது மட்டுமா காரணம்? என்றால், இல்லை. அதுக்குன்னு பல சிறப்புகள் இருக்கு.
இந்த தொழிலை எடுத்த புதிதில், மஜாரிட்டி மக்களின் மன நிலைமையில் தான் நானும் இருந்தேன் . ஏன்டா இந்த தொழிலுக்கு வந்தோம் என்ற ஏமாற்றம், எல்லோரும் மகிழ்வுடன் களிப்பாய் கொண்டாடும் வீக் எண்டு முதல் பண்டிகை காலம் எல்லாம் வேலை செய்தே களைக்கும், வீட்டோடும், நண்பர்கள்ளோடும் நேரம் கழிக்க முடியாத துர்பாக்கியவனாய் நான் என்ற கழிவிரக்கத்துடன்.
ஆனால் அது ஒரு சுகம் தான். ஒரு பொண்ணு பின்னால் பல காலம் சுற்றி அவளை பற்றியே நினைத்து, அவளின் பார்வை நம் மீது படாதோ என்று ஏங்கும் காதலன் போல்.
தொழிலே கண்ணாய் இருந்தும், அந்த பெண் போல் நம்மை திரும்பி கூட பார்க்காத இந்த தொழிலை.
ஏளன படுத்தும் அப்பெண் போல் எட்டி மிதித்த இந்த தொழிலை,
ஊர் கூட்டி அவமானம் படுத்தும் அப்பெண் போல ஊருக்கே உணவு பரிமாறி தான் உண்ண நேரமோ அவகாசமோ தராத இந்த தொழிலை ஒரு தலையாய் பல வருடம் காதலித்தேன்.
எதை நினைக்கின்றாயோ அதுவாகவே மாறுவாய் என்பது சாரம். அனுதினமும் அவளையே நேசிக்க, அந்த நேசமே அவளை நம் பக்கம் திருப்பும். அவள் மனம் விரும்பும் - நம்மை, நம்பி அவள் தன்னையே தந்து, நம் கரம் பற்றி இட்டு செல்வாள் வாழ்வின் உச்சத்திற்கு. அதே தான் இந்த தொழிலும் செய்தது. நான் பட்ட அவமானங்கள் எல்லாம் படிகட்டுகளாய் ஆயின அத்தொழில் என் கைவசம் வந்த பின். நான் அடைந்த உயர்வுக் கெல்லாம் உரமாய் இருந்தது அந்த தொழில் மேல் நான் கொண்டிருந்த அன்பு.

முதல நான் செய்யும் வேலையை சொல்லி விடுகின்றேன் --- சமையல் . நான் ஒரு சமையல் காரன் என்பதில் பெருமைபடுக்கின்றேன்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர் . னு நம்ம பாட்டன் சொன்னது.
அப்படி பட்ட விவசாயதிற்கு காரண காரியமாய் இருப்பது உணவு. உணவுக்கு உயிர் கொடுப்பது விவசாயி என்றால் உடல் கொடுப்பது சமையல் காரன் தான். சிவமும் சக்தியும் போல.

ஆனா விவசாயத்துக்கு முன்னாலயே சமையல் வந்துவிட்டது. ஆச்சிரியம் ஆனால் உண்மை.
எப்போ மனிதன் வேட்டையாடினானோ (அதுவே மனித குலத்தின் முதல் தொழில் ) அடுத்ததாய் வந்தது சமையல் தான்.

நெருப்பை தன் தேவைக்கேற்ப உருவாக்க முடியும் என்று கண்டுப் பிடித்த விஞ்ஞானி
அதனைக் கொண்டு சமையலை சாகா வரம் பெற்ற கலையாய் , தான் சாகாமலிருக்க உயிர் தரும் அற்புத கலையாய் படைத்த முதல் உன்னத கலைஞன் - சமையல் காரன்.
சுகமாய் வாழ வீடு, பின் வீதி, கிராமம், ஊர், மாநிலம், நாடு, கண்டம், உலகம் என்று விரிந்த பிரபஞ்சத்தின் அச்சாணி உணவே, அதை உருவாக்கும் உன்னத பணியே சமையல் கலை என்றால் ஏற்று கொள்ள யார் தான் மறுப்பர்.
இப்படி வேட்டை முதல் தொழிலாய் இருந்தாலும் அதனை முழுமைப் படுத்துவது சமையல் தான். உறுதுணையாய் உள்ள நெருப்பில்லாமலும் சமையல் முழுமைப் பெரும் சலட், ஜூஸ், சூப், மற்றும் உப்பு தடவி உற வைத்த உண்ணும் காய், கனி, கறி வகைகளால்.
பின் வரும் உடை, உறைவிடம், ஊருந்துகுள் அல்லாமல் சுகமாய் வாழ வழி செய்யும் இன்னும் மற்ற எல்லா தொழிலிற்கும் அஸ்திவாரமாய் இருப்பதும் நான் செய்யும் சமையல் தொழில் தான்.
இவ்வளவு பெருமை உடைய தொழிலை தேர்ந்தெடுத்ததனாலேயே முட்டாளாக இந்த சமுகத்தால் பார்க்க பட்டேன். தயவு செய்து உங்கள் பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களை விட நாங்கள் எந்த விததிலும் தாழ்ந்து போகவில்லை, மாறாய் உங்களை விட பல மடங்கு உயர்ந்த இடத்திலும், தொழிலிலும் இருக்கின்றோம் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள். இந்த வேண்டுக் கோள் பிறர் தொழிலை மட்டமாய் பார்க்கும் சிலர்காக மட்டும்.
fbi போல் தோண்டி துருவி தேட தேவையே இல்லை
fb யிலிருக்கும் இந்த status களை பார்க்க

உலகின் முதல் மொழியாம் தமிழ் பேசும் தமிழனாய்,
உலகின் முதல் தொழிலாம் சமையலை செய்யும் சமையல் காரனாய்
என்றும் பெருமையுடன்
சந்தோஷ்