More than a Blog Aggregator night writter: March 2020

Monday, March 23, 2020

சாதாரண மஞ்ச பையின் கார்ப்பரேட் கதை


சில நிகழ்வுகள் சாதாரண நிகழ்வு போல தோன்றும் அல்லது தோற்றிவைக்கப்படும்.
இன்று நம் நினைவில் மங்கலாய் அல்லது மறந்த, அன்றைய தொண்ணுறுகளில் {90's kidsகளுக்கு} பயிற்சயமான சங்கதி தான்  - மஞ்ச பை.

ஆடி மாசம் துணி கடைகளில் அடிதடி கூட நடக்கும் இந்த மஞ்ச பைக்கு.
ஊரிலிருந்து மஞ்ச பையோடு மட்டும்  போய் சாதித்தவர்கள் ஏராளம்.

அடுத்து பிளாஸ்டிக் பைக்கு போவோம்.
கறி கடையில் மட்டும் தென்பட்ட இந்த வஸ்து (பொருள்-னு தமிழில் சொல்ல வேண்டாமேன்னு )
 மெல்ல......
ரொம்ப......
 சிரமப்பட்டு.......
 பிறகு அசுர வளர்சியாய் அங்கிங்கெனாதபடி எங்கும் நிலைத்து நின்றது, நிற்கின்றது.

இப்படி அது வளர பல காரணிகள் காரணமாய் இருந்தது. அதில் ஒன்றும், முக்கியமானதும் user friendly.
user  friendly என்பதில் அதை கையாளுவது, பராமரிப்பது முதல் விலை மலிவு வரை எல்லாம் அடங்கும்.

இங்கே நாம் நினைவில் கொள்ளவேண்டியது ஒன்று உள்ளது - அந்த தொழில் ரகசியம் என்னவென்றால் வணிகருக்கு லாபம் தரக்கூடியப்  பொருட்கள் மட்டும் தான் சந்தைப்  படுத்தப் படுக்கின்றது, பொது மக்கள் கைகளுக்கும் கிடைக்கின்றது.
இப்படி தான்  மஞ்ச பையா? பிளாஸ்டிக் பையா ? என்ற கேள்விக்கு வணிகர்கள் தேர்ந்தெடுத்தது தான் இந்த பிளாஸ்டிக் பை. இதனால் விளைய போகும் ஆபத்து அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை அல்லது குறைவு.

இது மக்காத குப்பை இதனால் பெரும் ஆபத்து,
தவிர்த்திடுவோம் நெகிழியை என்று இப்போது கூவுகின்றோம்.

நாமும் "பழைய குருடி கதவை திறடி" கணக்காய் மக்கும் குப்பைகளான  -  வண்ண பைகளை கையில் சுமந்துக்கிட்டுப் போகின்றோம்.

மேற்சொன்னவை சாதாரண நிகழ்வு.
வளர்ச்சி - வீழ்ச்சி - வளர்ச்சி என்கின்ற வட்டம் - னு புரிந்துக் கொள்ளலாம்
இல்லை
இதில் அரசியல் இருக்கு, சூழ்ச்சி இருக்கு, லாபம் இருக்கு, வியாபர தந்திரம் இன்னும் பலது நாம் அறியாதது இருக்கு - னு ஐயப்படலாம்.

இந்த பிளாஸ்டிக்  மெல்ல......ரொம்ப...... சிரமப்பட்டு.......எப்படி எல்லா இடங்களிலும் வந்தது. மஞ்ச பையை ஒழித்து, பின்னே அந்த இடத்தை எடுத்துக்  கொண்டது. இதுக்கு பல உள்ளடி வேலை செய்திருக்கலாம்.
மஞ்ச பையை  அவமான பொருளாய் மாற்றுவது,
(பெருசா வந்துட்டான் மஞ்ச பையை தூக்கிக்கிட்டு மஞ்ச மாக்கான்)
இப்படி மஞ்ச பை பயன்ப்  படுத்துவோரை அதில் இருந்து விலகி செல்ல வைத்து,
சந்தை படுத்தப்  படாமல் தவிர்த்து,
பின்னே  அந்த இடத்தை எடுத்து கொண்டது.

அன்று இலவசமாய் கொடுத்த இந்த பைக்கு, இன்று விலை போட்டு விற்கின்றனர். இன்னும் மேலே போய் துணி பைக்கு அதிக விலை வசூலிக்கப்படுகின்றது. 

இதில் லாபம் அன்றும் இன்றும் என்றும் வணிகர்களுக்கு மட்டுமே என்பதில் எழுகின்றது ஐயம்

பையில் மட்டும் அல்லாமல் பற்பசை, சோப்பு என்று அன்றாட பொருட்கள் பலதிலும் ஒரு மாற்றம், முன்னேற்றம் என்று நிகழ்ந்தது.

குடும்பத்ததுக்கு ஒரு சோப்பு என்கிற நிலை போய் முகத்துக்கு, கேசத்துக்கு, உடலுக்கு என்று தனித்தனியாய் ஒரு சோப்பு என்ற நிலை இன்று.

சாம்பல், கறி தூள், வேப்பங்குச்சி போய் பல் பொடி என்றாகி ஆளுக்கொரு டூத் பேஸ்ட் என்று தொடர்கிறது. அந்த பேஸ்டில் இன்று கறித்தூள், உப்பு, கிராம்பு, வேப்ப பவர் கலந்திருந்தால் சாதா பேஸ்டை விட விலை  அதிகம்.

சாம்பல், தேங்காய் நார், புளி, எலுமிச்சை கொண்டு விலக்கிய பாத்திரங்கள் அசுத்துமானவை என்று விளம்பர படுத்தி,
நுரை கொண்ட திரவம், வாசம் கொண்ட சோப்பு கட்டி, இதுவே சுத்தத்தின் ஆதாரிட்டி என்று நம்ப வைக்க பட்டது. அதில் நூறு எலுமிச்சியின் சக்தி பெற்று விலை உயர்வுடன் வலம் வருகின்றது இன்று.

புதுமையை விரும்பாத பழைமை வாதம் இல்லை இது.
செலவின்றி  அல்லது கம்மி செலவில் இருந்த பொருட்களை பயன்பாட்டிலிருந்து அகற்றி மீண்டும் அதையே அதிக விலைக்கு விற்கும் தந்திரம்.

படிப்படியாய் மூளைச் சலவை செய்யப்பட்டோமோ என்ற எண்ணம் எழ மேற்சொன்ன காரணங்களே காரணம்.

இது மட்டுமல்ல இன்னும் இருக்கின்றது. உங்களுக்கு தெரிந்ததை கமெண்டில் பிகிருங்கள்.

Sunday, March 22, 2020

கொரோனா துதி 


கோவில்களை மூட வந்த கொரோனாவே
பாஸ்கரன்களை பெயில் ஆக்க வந்த  கொரோனாவே
உலகம் சுற்றிய கிழவர்களை
ஊ(வீ)ட்டுகுள்  பூட்டிய கொரோனாவே

உனக்கு
சாதி மதம் பாகுபாடில்லை
நாட்டு எல்லை ஏதும் இல்லை

பள்ளி பிள்ளைகளுக்கு விடுமுறை அளித்தாய்
அவர் விளையாடிட பெற்றோரை வீட்டில் அடைத்தாய்

கை தட்ட சொன்னோரை
கை கொட்டி சந்து(தி) சிரிக்க வைத்தாய்

இவை யாவும் செய்திட நீ பறித்த உயிர் போதாதா
அப்பால் போ என்ற
தீண்டாமை வலி புரிந்தது

இப்போது நீ
அப்பால் போ