Saturday, December 21, 2019
night writter: SIMPLE COOKING
night writter: SIMPLE COOKING: mushroom soup https://www.youtube.com/watch?v=nx_dJ6lpiQ4
Wednesday, September 25, 2019
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது
குழைந்தை பெற்ற பின்னால்
ஒரு வேளை எனக்கு வயாசயிடிச்சா இல்லை
மனசு இளகிடிச்சா இல்லை
இதய நோய் ஏதாவது ச்சி
இளகிய மனம் கொண்டவர்கள்,வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், இதய நோயாளிகள் எல்லாம் பார்க்காதீங்க தவிர்க்கவும்னு சொன்ன வீடியோ, போட்டோ இப்படி எதையும் எந்த ஒரு கூச்சமும் இல்லாம பார்த்த என்னால்
இப்போ எல்லாம் 'காணவில்லை' போஸ்டர கூட முழுசா பார்க்க முடியல அதுலயும் அந்த போஸ்டரில் குழைந்தை சிரித்த பிடி இருந்தால் இன்னும் மோசம்.
அப்படி சிரிச்ச குழைந்தை இப்ப எப்படி கஷ்டப்படுதோனு மனசு அடிசிக்கும் அன்னைக்கு தூக்கம் தூர போயிடும்
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது
Wednesday, August 1, 2018
இன்று அவள் பிறந்த நாள்
வாழ்த்தும் நான்தகர பெட்டியாய் .......
கேள்வியாய் ........
ஹீரோவாய் ........
விளக்கம் 1
தங்கம் அவள்.....
விடை அவள்.....
ஹீரோயின் அவள்.....
விளக்கம் 2
தங்கம் அவளை பூட்டி பாதுகாக்கும் தகர பெட்டி நான். என் மதிப்பு அவள் என்னுள் இருக்கும் வரை தான்.
பதில் இல்லா கேள்விக்கு பயன் இல்லை. அவள் இல்லா எனக்கும்.
ஹீரோயின் - அவள். என்னை அவள் ஏற்றுக்கொண்டதால் ஹீரோ ஆனேன்.
விளக்கம் 3
அவளை பூட்டி வைத்திருக்கும்
அகந்தை கொண்ட ஆண் மகன் அல்ல
அவளை விட்டு விட்டால் என்னை யாரும் மதிக்க மாட்டார்கள் என்னும் உண்மை யறிந்தவன். அவளால் நான் மதிக்க படுவதை மனதார ரசிக்கும் அவளின் ரகசிய ரசிகன் நான்.
விடையால் முழுமை பெரும் கேள்வி போல்
அவளால் முழுமை பெற்ற நான்.
என்னுள் முழுமை நிரப்பியவள்,
என்னுள் முழுமையாய் இருப்பவள்,
அவள் இல்லையேல், அரைகுறை நான் என்பதறிவேன்
என் எல்லா கேள்விக்கும், பதில் உண்டு அவளிடம்
பதிலாய் அவள் இருக்கும் தைரியத்தில் தான், நான்
கேள்வியாய் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
பூவின் வாசம், நாறுக்கும் வீசும்
பூவோடு சேர்ந்த பின்னால்.
(நாயகி) அவளை காதலித்ததால்
நாயகன் ஆகவில்லை நான்,
அவள் என்னை கண்கொண்டு பார்த்தால் ஆனேன்.
மலையை மகுடாக்கவா என்றேன்
வேண்டாம் என்னோடு இரு என்றாள்
இருக்கிறேன் அவள் கட்டளை ஏற்று
இன்றும், அவளுடன்
என்றும் இருக்க வேண்டும் என்ற பேராசையுடன்.
புகழ்ச்சி அவளுக்கு புடிக்காது, இந்த தமிழ் அவளுக்கு புரியாது
ஆனா இது புகழ்ச்சி இல்லை, பொய்யும் இல்லை
நான் பொய் சொன்னா உடனே கண்டுபுடிச்சிடுவா, இதை
எழுத்து கூட்டி பிடிக்க மட்டும் ஒரு நாள் எடுப்பா
இன்று அவள் பிறந்த நாள்
Tuesday, September 19, 2017
அப்பாவுக்கு தான் தெரியும்
சில விஷயங்கள் சொல்ல ரொம்ப கூச்சமா இருக்கும் .அதில் என் பட்டியலில் முதன்மையாய் இருப்பது
"அப்பா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்"
உங்களை மட்டும் தான் அவ்வளவு பிடிக்கும்,
அதுவும் நான் அப்பாவான பின்னால் - அப்பாவை மட்டும் தான் பிடிக்கும். (இதை, இதுநாள் வரை அவரிடம் சொல்லியதில்லை, இனியும் சொல்வேனா என்று தெரியவில்லை )
என் மகனால் தான் நானுணர்ந்தேன், என்னை
என் அப்பாவுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று.
மிக சுகமாய் வாழ்ந்த என் அப்பா, எனக்காக இரண்டு வேலைகளில் ஓய்வின்றி உழைத்தார். எனக்காய் சேமித்த அவரை - கஞ்சன் என்று அழைத்தேன். ஆனால் எந்நாளும் என் தேவைகளை சுருக்கியதும் இல்லை நிராகரித்ததும் இல்லை
அவரை பயமூட்டிய காலம் அனைத்திலும் என்னை வெற்றி பெற வைத்தது அவரின் பாசம் என்பதறிய இத்தனை காலம் ஆனது எனக்கு.
இப்படி நிறைய சொல்ல ஆசை தான் ஆனா கூச்சமா இருக்கு
கூடிய சீக்கிரம்
கூச்சங்கள் விலகும்
as usual want to thank கரு.பழனியப்பன்
ஒரு அரசியல்வாதியை புரிந்துக் கொள்ள அரசியல்வாதி ஆக வேண்டியதில்லை
ஒரு நடிகனை புரிந்துக் கொள்ள நடிகனை ஆக வேண்டியதில்லை ஆனா
ஒரு அப்பனை புரிந்துக் கொள்ள அப்பன் ஆனா தான் புரியும்.
Subscribe to:
Posts (Atom)

