More than a Blog Aggregator night writter

Sunday, July 28, 2013

இது புனைவு அல்ல - நான் செய்யும் தொழில் கேவலமுமல்ல

செய்யும் தொழிலே..............

அனைவருக்கும்  அவரவர்தம் தாயே தெய்வமாய், தோழியாய், வழிக்காட்டியாய் இருப்பாள்.
அவர்களின் தாய் மொழியே சிறந்ததாய், சிறப்புடையதாய் இருக்கும்.
அவர்களின் தாய் நாடே உயர்ந்த்தாய் இருக்கும், அயல் தேசங்களில் பஞ்சம் பிழைத்தாலும், தாய் நாட்டு உணர்வும் மோகமும் போகாது.

அதைப் போல தான், தாங்கள் செய்யும் வேலையின் மீதும் ஒவ்வொருவருக்கும் காதலும், ஊடலும் இருக்கும். அதற்கு நானும் விதிவிலகல்ல. 

நான் செய்யும் தொழிலை ரசிக்க இது மட்டுமா காரணம்? என்றால்,  இல்லை. அதுக்குன்னு பல சிறப்புகள் இருக்கு.

இந்த தொழிலை எடுத்த புதிதில், மஜாரிட்டி மக்களின் மன நிலைமையில் தான் நானும் இருந்தேன் . ஏன்டா இந்த தொழிலுக்கு வந்தோம் என்ற ஏமாற்றம், எல்லோரும் மகிழ்வுடன் களிப்பாய் கொண்டாடும் வீக் எண்டு முதல் பண்டிகை காலம் எல்லாம் வேலை செய்தே களைக்கும், வீட்டோடும், நண்பர்கள்ளோடும் நேரம் கழிக்க முடியாத துர்பாக்கியவனாய்  நான் என்ற கழிவிரக்கத்துடன்.

ஆனால் அது ஒரு சுகம் தான். ஒரு பொண்ணு பின்னால் பல காலம் சுற்றி அவளை பற்றியே நினைத்து, அவளின் பார்வை நம் மீது படாதோ என்று ஏங்கும் காதலன் போல்.
தொழிலே கண்ணாய் இருந்தும்,  அந்த பெண் போல் நம்மை திரும்பி கூட பார்க்காத இந்த தொழிலை.
ஏளன படுத்தும் அப்பெண் போல் எட்டி மிதித்த இந்த தொழிலை,
ஊர் கூட்டி அவமானம் படுத்தும்  அப்பெண் போல ஊருக்கே உணவு பரிமாறி தான் உண்ண நேரமோ அவகாசமோ தராத இந்த தொழிலை ஒரு தலையாய் பல வருடம் காதலித்தேன்.

எதை நினைக்கின்றாயோ அதுவாகவே மாறுவாய் என்பது  சாரம். அனுதினமும் அவளையே நேசிக்க, அந்த நேசமே அவளை நம் பக்கம் திருப்பும். அவள் மனம் விரும்பும் - நம்மை, நம்பி அவள் தன்னையே தந்து, நம் கரம் பற்றி இட்டு செல்வாள் வாழ்வின் உச்சத்திற்கு. அதே தான் இந்த தொழிலும் செய்தது. நான் பட்ட அவமானங்கள் எல்லாம் படிகட்டுகளாய் ஆயின அத்தொழில் என் கைவசம் வந்த பின். நான் அடைந்த உயர்வுக் கெல்லாம் உரமாய் இருந்தது அந்த தொழில் மேல் நான் கொண்டிருந்த அன்பு.

முதல நான் செய்யும் வேலையை சொல்லி விடுகின்றேன் ---  சமையல் . நான் ஒரு சமையல் காரன் என்பதில் பெருமைபடுக்கின்றேன். 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் 
தொழுதுண்டு பின் செல்பவர் . னு நம்ம பாட்டன் சொன்னது.

அப்படி பட்ட விவசாயதிற்கு காரண காரியமாய் இருப்பது உணவு. உணவுக்கு உயிர் கொடுப்பது விவசாயி என்றால் உடல் கொடுப்பது சமையல் காரன் தான். சிவமும் சக்தியும் போல. 

ஆனா விவசாயத்துக்கு முன்னாலயே சமையல் வந்துவிட்டது. ஆச்சிரியம் ஆனால் உண்மை.
 எப்போ மனிதன் வேட்டையாடினானோ (அதுவே மனித குலத்தின் முதல் தொழில் ) அடுத்ததாய் வந்தது சமையல் தான். 

நெருப்பை தன் தேவைக்கேற்ப உருவாக்க முடியும் என்று கண்டுப் பிடித்த விஞ்ஞானி
அதனைக் கொண்டு சமையலை சாகா வரம் பெற்ற கலையாய் , தான் சாகாமலிருக்க உயிர் தரும் அற்புத கலையாய் படைத்த முதல் உன்னத கலைஞன் - சமையல் காரன்.

சுகமாய்  வாழ வீடு, பின் வீதி, கிராமம், ஊர், மாநிலம், நாடு, கண்டம், உலகம் என்று விரிந்த பிரபஞ்சத்தின் அச்சாணி உணவே, அதை உருவாக்கும் உன்னத பணியே சமையல் கலை என்றால் ஏற்று கொள்ள யார் தான் மறுப்பர்.

இப்படி வேட்டை முதல் தொழிலாய் இருந்தாலும் அதனை முழுமைப் படுத்துவது சமையல் தான். உறுதுணையாய் உள்ள நெருப்பில்லாமலும் சமையல் முழுமைப் பெரும் சலட், ஜூஸ், சூப், மற்றும் உப்பு தடவி உற வைத்த உண்ணும் காய், கனி, கறி வகைகளால்.

பின் வரும் உடை, உறைவிடம், ஊருந்துகுள் அல்லாமல் சுகமாய் வாழ வழி செய்யும் இன்னும் மற்ற எல்லா தொழிலிற்கும் அஸ்திவாரமாய் இருப்பதும்  நான் செய்யும் சமையல் தொழில் தான்.

இவ்வளவு பெருமை உடைய தொழிலை தேர்ந்தெடுத்ததனாலேயே முட்டாளாக இந்த சமுகத்தால் பார்க்க பட்டேன். தயவு செய்து உங்கள் பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களை விட நாங்கள் எந்த விததிலும் தாழ்ந்து போகவில்லை, மாறாய் உங்களை விட பல மடங்கு உயர்ந்த இடத்திலும், தொழிலிலும் இருக்கின்றோம் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள். இந்த வேண்டுக் கோள் பிறர் தொழிலை மட்டமாய் பார்க்கும் சிலர்காக மட்டும்.

fbi போல் தோண்டி துருவி தேட தேவையே இல்லை
fb யிலிருக்கும் இந்த status களை பார்க்க










உலகின் முதல் மொழியாம் தமிழ் பேசும் தமிழனாய்,
உலகின் முதல் தொழிலாம் சமையலை செய்யும் சமையல் காரனாய்

என்றும் பெருமையுடன்

சந்தோஷ்

Monday, July 22, 2013

ஓர் உண்மை சம்பவம்

  அனாதை ஆனேன் கனடாவில் (ஓர் உண்மை சம்பவம்)


May 9 ல்   நான்  குடியிருந்த  வீடு தீயிக்கு இரையானது (அது ஒரு கருப்பு வியாழன் - 45 குடும்பங்களுக்கு), 12 மணி நேர வேலை (விடியற் 5 முதல் மாலை 5)  முடித்து வந்த நான் அசதியில் தூங்கி  போனேன்.

  புகை நாற்றமோ அல்ல நெருப்பின் வெப்பமோ  அல்லது முன்னோர் செய்த புண்ணியமோ  எதோ ஒன்று என்னை எழுப்ப
 எழுந்து பாரத்த போது வீட்டு பால்கனி எரிவதையும் , பின்னால் fire அலாரம் அடித்ததையும்  மூளை உள் வாங்கும் முன்னரே--- மனமோ?, அறிவோ?, மீண்டும் - எதோ ஒன்று என்னை எச்சரித்தது ---" முதலில் வெளிவேறு"  என்று.

பனியனும், நைட் பேண்ட்டுமாய் வெளியே வந்த நான், பின் தான் உணர்ந்தேன் எனது 1200$ மதிப்புடைய லேப்டாப், டாகுமென்ட், tax return form, certificate, மற்றும் எதையும் எடுக்கவில்லை என்று.


ஆனாலும்  பாஸ்போர்ட் , work பெர்மிட் இரண்டும் என் தலையணைக்கு அடியிலிருந்ததால் எடுக்க அவகாசமும், சுவாசமும் கிடைத்தது.


நான் இழந்தது அனைத்தையும் என்றாலும் இழக்காதது நம்பிக்கையை மட்டும்.  யாருமற்ற ஊரில் அனாதையாய் நின்றேன் .

போனிருந்தும் அதில் சார்ஜ் இல்லை.

கண்முன்னே வீடு மற்றும் அனைத்து  சேமிப்பும்  எரியும் போது ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எப்படி என்னுள் வந்தது??????????????

                                                                          


 சிறு சோகமோ, அல்லது அழுகையோ வரவேயில்லை.  இரவு தங்க இடமில்லை, மறுநாள் என்ன செய்வது என்று தெரியவில்லை.  


என்னால் முடியும் என்ற நம்பிக்கை.

இழந்தது பொருளை தான் , அதை மீட்டுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை என்னுள்  இருந்தது.

அப்பொழுது தான் சந்தீப் என்ற இந்தியனை பார்தேன். மொத்த பழக்கமே - 15 நிமிடங்கள் பொதுவாய்   பேசி இருப்பேன்  . 

நான் பனியனோடு குளிர்  காற்றில் அவதி உருவதை கண்டு, அவரின் ஜெர்கின்   தந்து உதவினார், அது அளவில் மிகவும் சிறியதாய் இருந்தாலும், அது அப்பொழுது என்னை குளிர்க் காற்றிலிருந்து காப்பாற்றியது.



     motel 6ல் மே 9 இரவு எஞ்சிய பனியன், அசாத்திய நம்பிக்கை, சோகத்தை அண்ட விடாத புன்முறுவலுடன்.

இதை தானே   நம்  பாட்டன் திருவள்ளுவர் 

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

என்று உரைத்தார்.

இந்த சம்பவம் எனக்கு  பல நல்ல உள்ளங்களையும், சில சுயநல மற்றும் மனதில் பகை கொண்டு உதட்டில் சிரிக்கும்  எண்ணம் கொண்ட சிலரையும் காட்டிக்கொடுத்தது. 


 இங்கு நண்பர்கள் என்ற போர்வையிலிருந்த கயவர்களின் சுயநல எண்ணங்களையும் , வஞ்சக செயல்களையும் அவர்களின் தகாத வார்த்தைகளையும் நான் பகிரவோ அவைகளை மீண்டும் நினைவில் கொள்ளவோ விரும்பவில்லை. கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்பதற்கேற்ப பல நல்ல விஷயங்களை மட்டுமே பகிர்வும், மீண்டும் மீண்டும் நினைவில் கொள்ளவும் விரும்புகின்றேன்.


canadian legion பாதிக்க பட்ட அணைவருக்கும் மிகவும் துரிதமாய் உதவிகள் செய்தனர். மறுநாள் ரெட் கிராஸ் அமைப்பின்ர்களும் உதவிட, என் நம்பிக்கை மேலும்  துளிர்விட்டது. 

என் உடன் வேலை பார்க்கும் Dan என்ற Canadian விவரமறிந்து எனக்கு கால் பண்ணினான். அவன் no. என் வசம் இல்லாததால் 3 முறை நான் எடுக்கவேயில்லை. விடாமல் கால் செய்த அவன் - ஒரு மெசேஜ் அனுப்பினான். அவன் என் நிலைக்கு வருந்துவதாகவும், அவனால் முடிந்த உதவிகள் செய்ய தயாராய் இருப்பதாகவும் தெரிவித்தான். பின்னர் நான் கால் செய்து கால் அட்டெண்ட் பண்ணாமைக்கு மன்னிப்பு கேட்டு, என் நிலமையை சொன்னேன். 3 நாட்களுக்கு motel 6ல் ரெட் கிராஸ் அமைப்பினர் தங்க உதவி செய்துள்ளார்கள் என்றும் பின்னர் தங்க இடம் தேடிக் கொண்டுள்ளேன் என்று விளக்கினேன்.


அதற்கு அவன் "தானும் தனது கேர்ள் friend டபுள் பெட் ரூம் apartment டில்  தங்கி உள்ளதாகவும் - நான் விருப்பபட்டால் அவர்களுடன் தங்கிக் கொள்ளலாம்" என்று சொல்லி வயிற்றில் பாலை வார்தான். 


அவனுடன் தங்கியிருந்த நாட்களில் விருந்தோம்பல் செய்து, மனதை உருக்கி அதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தான் Dan. அவன் கேர்ள் friend எனக்காக புது மெத்தை, தலையணை மற்றும் எனக்காகவே பாஸ்மதி அரிசியும் வாங்கி வந்து தந்தாள். எதற்கும் காசோ, ஏன் நன்றியை கூட எதிர்ப் பார்க்கவில்லை. அவர்களுக்கு என்றும் நன்றியும், கடமையும் பட்டுள்ளேன்.


எதற்கும் கண் கலங்காத நான் கண் கலங்கிய சம்பவம் நடந்தது மே 10ல் -
 

ரெட் கிராஸ் அனைவருக்கும்  புது டிரஸ் மற்றும் மிகவும் அத்தியவச பொருட்கள் வாங்கிக் கொள்ள, வால் மார்ட் கிப்ட் வௌசெர் தந்தனர். நானும் சிமி என்கின்ற nigera கனடியனும், இருவரும் எங்களுக்கு  தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வெளிவரும் சமயம் - ஒரு பெண்மணி trolley முழுவதும் பொருட்களுடன் அங்கிருக்கும் செக்யூரிட்டியிடம் எதோ வினவ, சிமி அவர்களிடம் சென்று தனக்கு தெரியும் என்று சொல்லி, அவன் பொருட்களை என்னிடம் தந்துவிட்டு அவரின் trolleyயை வாசல் நோக்கி தள்ளி சென்றான், நாங்களிருவரும் பின் சென்றோம்.  வெளிவரும் வாசலின் மையமாய் 2 மிக பெரிய பெட்டிகள் இருந்தன. அப்பொழுது தான் நான் கவனித்தேன் அதிலிருந்த ஸ்டிக்கரை -- "DONATIONS FOR STONY PLAIN FIRE VICTIMS" என்றிருந்தது. 
(குறிப்பு- வால் மார்ட் இருப்பது spruce grove என்னும் எங்களின் பக்கத்து ஊர், மட்டுமின்றி வால் மார்டின் ஸ்பீக்கரில் 10 நிமிடத்துக்கொருமுறை இந்த செய்தியை சொல்லி donation வரவேற்க படுகின்றது என்னும் awareness கொடுத்த வண்ணமிருந்தனர்.)

சிமியும் நானும் அந்த தாய் உள்ளம் கொண்டவரிடம் trolley முழுவதும் பொருளாய் இருக்கே?  இதில் எதை எல்லாம் donation பாக்ஸ்சில் இட வேண்டும், என்று சொன்னால், நாங்கள் அதனை எடுத்துப் போட உதவுவதாக கூற, அப்பெண்மணி மேலே இருக்கும் 3 பைகளை தவிர மற்ற அனைத்தும் என்று கூறினார். பொருட்களை எடுத்துப் போட்ட வண்ணமே நாங்களிருவரும் அந்த fire victims என்பதை தெரிவிக்க (எனக்கு கண்கள் கலங்கியிருந்தது ) அவர் எங்களை கட்டி அணைத்து கலங்க வேண்டாம் என்றும் இன்னும் தன்னைப் போல் நிறைய பேர் உதவ காத்திருப்பதாகவும் கடவுள் எங்களுக்கு உறுதுணையாய் இருப்பார் என்றும் கூறினார் இல்லை என்னை பொறுத்தவரை ஆசிர்வதித்தார். 

அவர் தனக்கு என்று வாங்கிய பொருட்களின் விலை 30$ ருக்கு இருக்கும் ஆனால் donationனுக்கு போட்ட பொருட்களின் விலை 150$ ருக்கு மேல் தான் இருக்கும். 

அது மட்டுமில்லை stony plain canadian legionனுக்கு வெள்ளி கிழமை காலை 7 மணி முதலே spruce grove, park லேன்ட், மற்றும் stony plain மக்களும் donation தந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் வேலைக்கு லேட்டாய் போவதை கூட பெரிது படுத்தாமல் அரை மணி நேரம் பயணித்து வந்து கியூவில் நின்று donationகளை தந்து சென்றனர்.  

இங்கே ஜாதி, மதம், இனம், நாடு, என்று எந்த பேதமும் துளியுமில்லை. தன் சக மனிதன் அனைத்தையும் இழந்து நிற்கின்ற போது தன்னால் ஆன மிக சிறிய உதவி என்றே எண்ணினர். 

நான் எனக்கு ஒரு போர்வையும், டூத் brush, பேஸ்ட் மட்டும் எடுத்துக் கொண்டு சிமிக்காக காத்திருந்தேன். அப்பொழுது ஒருவர் legion staff என்னிடம் வந்து, எதற்கும் தயங்காமல் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு பணித்தார், இது உங்களுக்கான உதவியல்ல உரிமை என்றும் - தயக்கம் வேண்டாம் என்றும் சொன்னார், நான் தான்,  அளவுக்கு மீறி எனக்கு எதுவும் வேண்டாம், குழந்தைகளுடன் இருக்கும் குடும்பங்களுக்கு இது தேவைபடும் என்று சொல்லிவிட்டேன். 

 
 இன்று ஜூலை 22 
நண்பனின் லேப்டாபில் இதை பதிவேற்று கின்றேன். எங்களுக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் . காலமும் விதியும் என்னிடமிருந்து எடுத்ததை, அவையே பல் மடங்காய் பல நல்ல உள்ளங்கள் மூலம் திருப்பிக் கொடுத்தது.

எனக்கு உதவிய Dan, Justine, பீட்டர், பார்க் லேன்ட் neighbour வூட் லிங்க், ரெட் கிராஸ், கனடியன் legion, மற்றும் முகம் தெரியாத, பெயர் தெரியாத பல நல்ல உள்ளங்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி மறப்பது நன்றன்று ​​​ ___ என்ற பாட்டனின் சொல்லை நினைவில் கொண்டு. நீங்களும் அந்த நல்ல உள்ளங்களை மனதார வாழ்த்தினால் அதுவே அவர்களை இன்னும் வாழ்க்கையில் மேலே இட்டு செல்லும் என்ற நம்பிக்கையுடன் 

சந்தோஷ் .

 

Saturday, May 25, 2013

ஆறு மனமே ஆறு


மனம் ஆறவில்லை அவரின்
மறைவையரிந்து.

உள்ளம் உருகுதய்யா 

உள்ளம் துடித்து, உருகுது அவர்
உயிருடன் இல்லையென்பதரிந்து

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் 

இந்த அருளை  முருகன்
அந்த மாபெரும் கலை மேதைக்கு
அருளி  - ஆட்கொள்ள

வேண்டிக் கொள்ளும் கோடான கோடி
ரசிகர்களில் ஒருவன்

சந்தோஷ்

கடந்த  இரண்டு வாரங்களில் பல மோசமான நிகழ்வுகள் நடந்தேறினே,
அவை எல்லாம்  விலாவாரியாக  விரைவில்........

Wednesday, May 8, 2013

நடிகை ரம்பா -- பொது வழியில் சொல்லக்கூடாத விஷயம் 

(கனவுக் கண்ணிகளில் ஒருவர்)

 
நாம கற்பனை பண்ண உருவத்தில் 80% ஒத்துப் போற மாதிரி ஒரு பெண்ணைப் பார்த்தாலே --- அது நம்ம ஆளுன்னு முடிவுக்கு வந்துடுவோம்,
 
ஆனா நான் கற்பனைப் பண்ணதில் 99% முழுசாய் வந்து நின்ன ஆளுத் தான் ரம்பா.
இத்தனைக்கும் நான் ரம்பாவைவிட வயதில் சின்ன பையன். இருந்தாலும் தீவரமாய் ரம்பாவை ரசிக்க --(ரசிக்க மட்டும்) ஆரம்பித்தேன்.
 
"அவள் எது எது சொன்னாலும் கவிதை "
என்பது போல் ரம்பா எந்த படம் நடித்தாலும் தேடிப் போய் பார்ப்பேன்.
 
விஜயலஷ்மி, அமிர்தா என்று பெயர்க் கொண்ட பெண்களையும் ஒரு முறைக்கு பல முறை பார்த்து வழிந்திருக்கின்றேன்.
 
இன்னைய தேதி வரைக்கும் என் மனைவி உள்பட, என் தந்தை,தாய், தம்பி அனைவரும், ரம்பாவின் பாடல்  டிவியில் வந்தால் 
 
"சந்து, உன் ஆளு பாட்டு போவுது வரீயா"
என்று கிண்டலோடு அழைப்பதைப் பெருமையாய் ஏற்று போய் பாடலையும் ரம்பாவையும் ரசிப்பேன்.
 
என் 14 வயதில், என் தந்தை நான் சேகரித்து வைத்திருந்த  ரம்பாவின் போட்டோவை எல்லாம் எடுத்து தீயிக்கு இரையாக்கினார்.
"பிஞ்சிலேயே பழுத்திருக்கு பாரு"  ___  என்ற commentடோ,
அவருக்கு தெரியாது நான் ஸ்ரீதேவி,ஸ்ரீப்ரியாவை க் கூட sight அடித்தேன் என்று.
 
ரம்பா கூட வந்த சிம்ரன், ஜோதிகா, லைலா, ரோஜானு  எல்லோரையும் எனக்கு பிடிக்குமுனாலும் ரம்பா இஸ்  ஸ்பெஷல் for  me.
 
எங்கள் நண்பர்கள் வட்டத்தில் ரோஜா சிறந்த டான்சரா? ரம்பா சிறந்த டான்சரா? என்ற வாதம் வரும் போதெல்லாம் ரம்பா மட்டும் பிரபுதேவாவுடன் ஒரு படம் நடிக்கட்டும் அப்பத் தெரியும் யார் சூப்பர் டான்சருனு- சொல்வேன்.
 
அதுக்கு தகுந்தார்போல் v .i .p படத்தில் பிரபுதேவாவுடன் என் தலைவி போட்ட ஆட்டம் சான்சே இல்லை

 
 
அது மட்டுமா அந்த படத்தில் ரம்பா " சந்தோஷ் i  love  you " னு  சொல்லும் வசனத்துக்காகவே collage  கட் பண்ணிட்டு 15 தடைவைக்கும் மேல் பார்திருக்கின்றேன்.
 
நான் படித்தது பாய்ஸ் ஸ்கூல் என்பதாலையே, எங்கள் வட்டத்தில் லவர் இல்லை என்றாலும் சைட் அடிக்க ஒரு பெண் கண்டிப்பாய் இருக்க வேண்டும். இல்லை என்றால்
அவன் ஜீரோ தான்..............
 
  என்னைப்  போல.........
 
 
 கலைஞரின் அருளால் பஸ் பாஸ் கொடுத்த நேரம் வேறு
 எனவே girls ஸ்கூல் பொண்ணுங்களும், நாங்களும் D.T .D .C  அரசு பேருந்தில் மட்டுமே பயணிப்போம்.
 
முழு நேர பணியாய் 
மூச்சடக்கி முத்தெடுப்பதுப்  போல் 
நேர்மையுடன் காதலித்தாலே 
 
ஒரு புன்னகையோ அல்லது
ஒரு கடைக் கண் பார்வையோ  
மட்டும் கிட்டும் 
எனும் போது நான் எல்லாம் எங்க போவது?????
 
 
எல்லோருக்கும் sight அடக்க ஒரு பிகரோ
அல்லது  
ஒரு காதலியோ இருக்க ..............
 
இருக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் 
 
நான் மட்டும் தணித்து விடப் பட்டேன்.
 
நண்பர்கள் என்னிடம் "உன் ஆளு யாரு? "என்று கேட்டப் பொழுது நான் முழிப் பிதுங்கி நின்றேன் .........
 
ரம்பா தான் என் ஆளு அவளை தவிர வேறு பெண்ணை நான் பார்பதில்லை என்று சொன்ன போது 
 
ஜீரோவில் இருந்து ஹீரோவாக மட்டுமில்லை சூப்பர் ஸ்டாராக உயர்ந்தேன் 
 
இப்படி infatuation (அறிவற்ற மோகம்) னில் இருந்து என்னை காப்பாற்றியது ரம்பா தான்.
 
ஆனாலும்
முழு சாப்பாடு சாப்பிட்ட பின்னுமும்
வயிறு முட்டி தொண்டை வரை வந்த பின்பும் 
பாயசம் என்றால் இடம் கொடுக்கும் 
உடல், குடல் போல 
 
வந்த தேவதை தான் ...........என் காதலி 
என் மைதிலி 
 
 
 
என் மனைவி 
 
அது வரை தெரியாது நான் 
சாப்பிடவே  வில்லை 
 
உணவை (ரம்பா ) பார்த்து மட்டுமே இருக்கின்றேன் என்று 
o .k . அது வேறு கதை
 
ரம்பாவின் சாதனைகள் என்றால் அஜித்,விஜய், ரஜினி,கமல் என்று எல்லோரோடும் நடித்த நடிகை 
 
கவர்ச்சி,நடிப்பு,நடனம்,என்று எல்லா ஏரியாவிலும் சிறந்த நடிகை என் கனவு கண்ணி என் தலைவி ரம்பா என்றால்
 
 
யார் இல்லை என்று சொல்வார்??????????????.
 
 
என் வயது ஒத்த த்ரிஷா, senha , னு  பலர் இருந்தாலும் ரம்பா என்னை அதிகம் அவர் பக்கம் இழுத்தார் என்பது 100% உண்மை.
 
பின்ன வந்த நடிகைகளில் அஞ்சலி தான் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறார்.

என்றும் அன்புடன்

சந்தோஷ் 
 
 
 


Friday, May 3, 2013

டி ஆரின்  

நான் முதலில் ரசித்தது டி ஆர் தான் 

இது ஜோக் பதிவல்ல. டி ஆரின் ரசிகன் என்பதில் எப்பொழுதும் பெருமைக் கொள்ளும் ஒரு சராசரி ரசிகனின் பதிவு.
 
நான் u .k .g  மற்றும் முதல் வகுப்பு படித்தது செய்யாரு (வடஆற்காடு ) பெரியம்மா வீட்டில் .
 
அப்பொழுது ஒரு நல்ல திருநாளில் என் அண்ணன் ரவி  "ஒரு தாயின் சபதம்"  அழைத்துச் சென்றார்.

அண்ணன்களின் விருப்பமமே தம்பிகளின் விருப்பமாய் 80% ஆவது இயற்கை. அது வரையில் ரஜினி தான் எங்கள் இருவரின் அபிமான ஹீரோ. ஒரு தாயின் சபதம் பார்த்த பிறகு நான் டி ஆரின் ரசிகனாய் மாறினேன்.
 
எனது அண்ணனை வம்புக்கிழுப்பதற்காகவே உனது ஹீரோ ரஜினியை எனது தலைவரிடம் வரச் சொல் அவர் கம்பியில் சுற்றி.... சுற்றி...., சும்மா, பறந்து....பறந்து...... அடிப்பார் என்று முதன்முதலாய் கருத்து வேறுபாடு மற்றும் ரசனை வேறுபாடும் உருவானது.

சண்டைக்காக மட்டுமே டி ஆரை ரசித்த நான் அதே அண்ணனின் வழிக்காட்டலில் எனது பதின் பருவத்தின் துவக்கதில்         டி ஆரின் பாடல்களின் அர்த்தம் விளங்கியது.
 
மற்றும் என் தந்தையின் - t .d .k . cassestலில் டி ஆரின் பாடல்களை national taperecord ரேடியோவில், அந்த காஸ்செஸ்ட் தேய தேய கேட்டு மகிழ்ந்த காலம் எல்லாம்  சொர்க்கம் என்றால் மிகையல்ல.
 
டி ஆரின் வரிகள் மற்றும் உவமைகளை  - இனி டி ஆரே நினைத்தாலும் வெல்ல முடியுமா என்பது கேள்விக்குரிய?????????????
 
காதல் வசபடாதவனையும் காதலின் சோகம் மற்றும் காதலின் வலியை அரியச் செய்தவர் டி  ஆர்                                           உதாரணமாய் 
 
வாசமில்லா மலரிது 
வசந்தத்தை தேடுது
வைகையில்லா மதுரை இது 
மீனாட்சியை தேடுது 
 
இந்த உவமை  யாரால் எழுத முடியும் 
 
என் தலைவன் டி  ஆரைத் தவிர 
அது மட்டுமா ?
 
 
நான் ஒரு ராசியில்லா ராஜா 
என் வாசத்துக்கு இல்லை இது வரை ரோஜா 
 
 
பாட்டிசைக்க மேடைக் கண்டேன் 
ராகங்களைக் காணவில்லை 
 
பலர் இழுக்க தேரானேன் 
ஊர்வலமே நடக்கவில்லை 
 
என்று போகும் பாடல் ஓர் இடத்தில் 
 
தோல்விதனை எழுதட்டும் வரலாறு 
துணைக்கென்று இனிமேல் யார் கூறு 
 
என்று முடியும் போது 
காதலை,
 
காதலின் வலியை இதைவிட எளிதாய்,
அதே நேரம் வலியாய்  சொல்ல  
எவனால் முடியும்,
 
 என் தலைவன் டி ஆரை தவிர 
 
இது மட்டுமா காதலிக்கின்ற பெண்ணை போற்றி புகழ,
 
அவளை 
அணு அணுவாய் ரசிக்க 
 
தடாக்கத்தில் மீன் இரண்டு
காமத்தில் தடுமாறி
தாமரை பூமீது வீழ்ந்தனவோ

இதைக்   கண்ட வேகத்தில்
 பிரமனுமும் மோகத்தில்
படைத்திட்ட பாகம் தான்
உன் கண்களோ

என்று சொல்லும்போது யார் தான் டி ஆரை ரசிக்கமால் இருக்க முடியம்

 
இது sample தான்

எவ்வளவோ விஷயம் இருந்தாலும், டி ஆர் என் தலைவன் என்பதில் பெருமைக் கொள்ளும் ஒரு

சராசரி ரசிகன்

என்றும் அன்புடன்
சந்தோஷ்  
 
 

 

Friday, April 12, 2013


நடிகை அஞ்சலி  - இன்று 

மற்றும் அடி-உதை (இயக்குனர்கள் பாலா -வசந்த பாலன்)



அஞ்சலிக்காக கண்ணீர் வடித்த வசந்தபாலன், தனது கதாநாயகனை அடித்த வீடியோ என் நினைவுக்கு வந்தது.

மற்றும் பரதேசி ரியாலிட்டி டிரைலெரும் நினைவுக்கு வந்தது.

பாலா இதில் நடித்து காட்டினாரே அன்றி உண்மையில் அடிக்கவில்லை.
 
 
 
 
 
 
 
 
 எனக்கு அங்காடித் தெரு படம் மிகவும் பிடிக்கும், 
என்ற போதிலும், இந்த வீடியோ என்னை சற்று சலனப்படுத்தியது என்பது உண்மை.
 
என்னால் அங்காடி தெரு வீடியோவை பதிவேற்ற முடியவில்லை எனவே அதனின் லிங்கை கொடுத்துள்ளேன்.
 
இயக்குனர்கள்  தமக்கு தேவையானதை பெறுவதில் கையாளும் விதிம் வேறாய் இருப்பினும்,
 
நாம் பெறுவது நல்ல சினிமாவாக இருக்கும் பட்சத்தில்,  நான் இதில் கேள்வி எழுப்ப விரும்பவில்லை.
 
 
அன்புடன் 
சந்தோஷ் 
 
 
  
 
 

 

Saturday, April 6, 2013

18+ மட்டும் - ஜோக்ஸ்


இரண்டு வாரமாய்  வேலை tight யில்  போஸ்ட் எதுவும் போடவில்லை. எனவே ரிலாக்ஸ்க்கு கொஞ்சம் adult ஜோக்ஸ் போடலாமுன்னு தொனித்து,

அது மட்டும் இல்ல....... என் கூட வேலை செய்யும் பொண்ணு (canadian ) நேத்து சில ஜோக்ஸ் சொன்னா - அதையும் இதில் சேர்த்து விட்டுடலாமேன்னு  தான்.

முதலில் எனக்கும் அவளுக்கும் நடந்த உரையாடல்

காலையில நான் வாழைபழம் சாப்பிடுறத  பார்த்து, சிரிச்சுகிட்டே போனா,

நான் அவளை கூப்பிட்டு என்ன விஷயமுனு கேட்டேன்
"அதுக்கு அவ when I saw banana I remembered my collage day joke, tats wat I smiled"னு  சொன்னா, ஆர்வக்கோளாறு ஆப்பாடக்கரா நானும் என்ன ஜோக்குனு கேட்க

அவ சொன்ன ஜோக்

ஒரு டீன் ஏஜ் பொண்ணு அவங்க அம்மாகிட்ட கேட்டாளாம்
why do hairs growing on bottom?
mom replied ur monkeys r growing.
she happily went to her sister and sharing tat "my money's r growing".
she silently replied "my money's are already eating bananas".னு

சிரிச்சாலும்..)))
நமக்கு, கவுண்டமணியார் சொன்னது போல
"மானம் மாரியாத்தா, சூடு சூல்லாயுதம், வெட்கம் வேலாயுதம்" எல்லாம் ஒண்ணு சேர்ந்து, நான் காலேஜ் படிக்கும் போது பிரபலமான ஜோக்கை (மொக்கையை) எடுத்து விட்டேன்,
did u know the similarity between violin and girls?னு 
அவக் கொஞ்ச நேரம் யோசித்திட்டு தெரியலையனுச் சொன்னா
நான் பெருமையாய்
both r press in top and play in bottom.
to give some pleasureனு சொல்லி தப்பிச்சிக்  கிட்டேன்.

அப்புறம் பல ஜோக்ஸ் பரிமாறிக் கொண்டோம். அவையெல்லாம் பிறகு.

உடனே பல கசமுசா ஜோக்ஸா நினைவுக்கு வந்தது - அது தான் கீழே உள்ளவை

என்னடா இவ்வளோ கீழ்த்தரமாய் இருக்கேன்னு நினைப்பவர்கள், தயவுச் செய்து இதற்கு மேல் தொடர வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,
துணிந்தவர்களை மொக்கையால்
கொல்லுகிறேன்

நண்பன் 1 - இவர்  தான் என் மனைவி ஆஷா
நண்பன் 2 - அட எனக்கு இவங்களை  முன்பே தெரியுமே
நண்பன் 1 - அப்படியா?
நண்பன் 2 -  இரண்டுப் பேரும் ஒண்ணா தூங்குப் போது மாட்டிக்கிட்டோம்
நண்பன் 1 - என்னடா சொல்லுரே
நண்பன் 2 - ஆமா, இரண்டு பேரும் கணக்கு வகுப்புலே தூங்கினப்ப, ஒண்ணா வாத்தியார்கிட்ட மாட்டிக்கிட்டோம்
நண்பன் 1 - ஹி ஹி ஹி (மனசுக்குள் - பொழச்சேன்)

................................................................................................................................................................

ஒரு தொழிலாளி, முதலாளிக்கு sms அனுப்பினார்

எனக்கு உடம்பு சரியில்லை எனவே விடுப்பு தேவைனு
முதலாளி உடனே பதில் sms அனுப்பினார்
எனக்கு உடம்பு சரியில்லை என்றால்
"நான் என் மனைவியை இறுக்க அணைத்து முத்தம் கொடுப்பேன். உடனே என் உடலும் மனமும் சரியாகிவிடும்,
நீயும் அதையே  try பண்ணிப் பாரேனு" பதில் sms அனுப்பி வைத்தார்.

இரண்டு மணி நேரம் கழித்து முதலாளிக்கு ஒரு sms வந்தது தொழிலாளியிடமிருந்து
"நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை

 என் உடலும் மனமும் சரியாகிவிட்டது, அது மட்டுமின்றி
உங்கள் மனைவியும் மிகவும் அன்புடன் ஒத்துழைத்தார்னு.
.....................................................................................................................................................................

ஒரு அறிவாளி டாக்டருக்கு போன் பண்ணி
"டாக்டர் என் மனைவி பிரசவ வலியால் துடிக்கரா"
டாக்டர் - இது அவங்களின் முதல் குழந்தையா?
அறிவாளி - இல்லை "நான் அவளின் கணவன்"
டாக்டர் - %&8

.......................................................................................................................................................................

In a bath room,
a boy touches a girl everywhere!
You Know whose that boy?
Stupid It's Lifeboy Soap!
Dirty people always think dirty.

.....................................................................................................................................................................

வெற்றிடங்களை நிரப்பு

1. சு...........ணி 
2. பு...........டை 
3. pu.......s...
4. bo........s 
5. f...........k

விடைகள் 









1. சுடுத்தண்ணி 
2. புத்தாடை 
3. pulse
4. books
5. fork
நீங்கள் 5க்கும் தவறான பதில் அளித்திருந்தாலும் தவறில்லை 

.....................................................................................................................................................................


 இரண்டு நண்பர்கள் ஒரு பெண்ணுடன் உறவு வைத்தனர் 
நண்பன் 1 - என் மனைவியே இதற்கு  பரவாயில்லை 
நண்பன் 2 - நீ சொன்னது 100% உண்மை
உன் மனைவி இதற்கு எவ்வளவோ மேல் 

......................................................................................................................................................................
 After being married for 30 yrs, a wife asked her husband to describe her.

He looked at her and then said..

"You're A,B,C,D,E,F,G,H..
..I,J,K."

She asks:"What does that mean?"

He said: Adorable, Beautiful, Cute, Delightful, Elegant, Foxy, Gorgeous, Hot.

She smiled happily and said what about,I.J.k?"

He said,"I'm Just Kidding!"
.....................................................................................................................................................................

நீங்கயெல்லம் என்னை விட பெரிய ஆளுங்க உங்களுக்கு இதை விட அதிகமாய்  தெரியும் .........

அதை எல்லாம் comment ல் சொல்லவும்


என்றும் அன்புடன்


சந்தோஷ்