More than a Blog Aggregator night writter

Monday, March 23, 2020

சாதாரண மஞ்ச பையின் கார்ப்பரேட் கதை


சில நிகழ்வுகள் சாதாரண நிகழ்வு போல தோன்றும் அல்லது தோற்றிவைக்கப்படும்.
இன்று நம் நினைவில் மங்கலாய் அல்லது மறந்த, அன்றைய தொண்ணுறுகளில் {90's kidsகளுக்கு} பயிற்சயமான சங்கதி தான்  - மஞ்ச பை.

ஆடி மாசம் துணி கடைகளில் அடிதடி கூட நடக்கும் இந்த மஞ்ச பைக்கு.
ஊரிலிருந்து மஞ்ச பையோடு மட்டும்  போய் சாதித்தவர்கள் ஏராளம்.

அடுத்து பிளாஸ்டிக் பைக்கு போவோம்.
கறி கடையில் மட்டும் தென்பட்ட இந்த வஸ்து (பொருள்-னு தமிழில் சொல்ல வேண்டாமேன்னு )
 மெல்ல......
ரொம்ப......
 சிரமப்பட்டு.......
 பிறகு அசுர வளர்சியாய் அங்கிங்கெனாதபடி எங்கும் நிலைத்து நின்றது, நிற்கின்றது.

இப்படி அது வளர பல காரணிகள் காரணமாய் இருந்தது. அதில் ஒன்றும், முக்கியமானதும் user friendly.
user  friendly என்பதில் அதை கையாளுவது, பராமரிப்பது முதல் விலை மலிவு வரை எல்லாம் அடங்கும்.

இங்கே நாம் நினைவில் கொள்ளவேண்டியது ஒன்று உள்ளது - அந்த தொழில் ரகசியம் என்னவென்றால் வணிகருக்கு லாபம் தரக்கூடியப்  பொருட்கள் மட்டும் தான் சந்தைப்  படுத்தப் படுக்கின்றது, பொது மக்கள் கைகளுக்கும் கிடைக்கின்றது.
இப்படி தான்  மஞ்ச பையா? பிளாஸ்டிக் பையா ? என்ற கேள்விக்கு வணிகர்கள் தேர்ந்தெடுத்தது தான் இந்த பிளாஸ்டிக் பை. இதனால் விளைய போகும் ஆபத்து அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை அல்லது குறைவு.

இது மக்காத குப்பை இதனால் பெரும் ஆபத்து,
தவிர்த்திடுவோம் நெகிழியை என்று இப்போது கூவுகின்றோம்.

நாமும் "பழைய குருடி கதவை திறடி" கணக்காய் மக்கும் குப்பைகளான  -  வண்ண பைகளை கையில் சுமந்துக்கிட்டுப் போகின்றோம்.

மேற்சொன்னவை சாதாரண நிகழ்வு.
வளர்ச்சி - வீழ்ச்சி - வளர்ச்சி என்கின்ற வட்டம் - னு புரிந்துக் கொள்ளலாம்
இல்லை
இதில் அரசியல் இருக்கு, சூழ்ச்சி இருக்கு, லாபம் இருக்கு, வியாபர தந்திரம் இன்னும் பலது நாம் அறியாதது இருக்கு - னு ஐயப்படலாம்.

இந்த பிளாஸ்டிக்  மெல்ல......ரொம்ப...... சிரமப்பட்டு.......எப்படி எல்லா இடங்களிலும் வந்தது. மஞ்ச பையை ஒழித்து, பின்னே அந்த இடத்தை எடுத்துக்  கொண்டது. இதுக்கு பல உள்ளடி வேலை செய்திருக்கலாம்.
மஞ்ச பையை  அவமான பொருளாய் மாற்றுவது,
(பெருசா வந்துட்டான் மஞ்ச பையை தூக்கிக்கிட்டு மஞ்ச மாக்கான்)
இப்படி மஞ்ச பை பயன்ப்  படுத்துவோரை அதில் இருந்து விலகி செல்ல வைத்து,
சந்தை படுத்தப்  படாமல் தவிர்த்து,
பின்னே  அந்த இடத்தை எடுத்து கொண்டது.

அன்று இலவசமாய் கொடுத்த இந்த பைக்கு, இன்று விலை போட்டு விற்கின்றனர். இன்னும் மேலே போய் துணி பைக்கு அதிக விலை வசூலிக்கப்படுகின்றது. 

இதில் லாபம் அன்றும் இன்றும் என்றும் வணிகர்களுக்கு மட்டுமே என்பதில் எழுகின்றது ஐயம்

பையில் மட்டும் அல்லாமல் பற்பசை, சோப்பு என்று அன்றாட பொருட்கள் பலதிலும் ஒரு மாற்றம், முன்னேற்றம் என்று நிகழ்ந்தது.

குடும்பத்ததுக்கு ஒரு சோப்பு என்கிற நிலை போய் முகத்துக்கு, கேசத்துக்கு, உடலுக்கு என்று தனித்தனியாய் ஒரு சோப்பு என்ற நிலை இன்று.

சாம்பல், கறி தூள், வேப்பங்குச்சி போய் பல் பொடி என்றாகி ஆளுக்கொரு டூத் பேஸ்ட் என்று தொடர்கிறது. அந்த பேஸ்டில் இன்று கறித்தூள், உப்பு, கிராம்பு, வேப்ப பவர் கலந்திருந்தால் சாதா பேஸ்டை விட விலை  அதிகம்.

சாம்பல், தேங்காய் நார், புளி, எலுமிச்சை கொண்டு விலக்கிய பாத்திரங்கள் அசுத்துமானவை என்று விளம்பர படுத்தி,
நுரை கொண்ட திரவம், வாசம் கொண்ட சோப்பு கட்டி, இதுவே சுத்தத்தின் ஆதாரிட்டி என்று நம்ப வைக்க பட்டது. அதில் நூறு எலுமிச்சியின் சக்தி பெற்று விலை உயர்வுடன் வலம் வருகின்றது இன்று.

புதுமையை விரும்பாத பழைமை வாதம் இல்லை இது.
செலவின்றி  அல்லது கம்மி செலவில் இருந்த பொருட்களை பயன்பாட்டிலிருந்து அகற்றி மீண்டும் அதையே அதிக விலைக்கு விற்கும் தந்திரம்.

படிப்படியாய் மூளைச் சலவை செய்யப்பட்டோமோ என்ற எண்ணம் எழ மேற்சொன்ன காரணங்களே காரணம்.

இது மட்டுமல்ல இன்னும் இருக்கின்றது. உங்களுக்கு தெரிந்ததை கமெண்டில் பிகிருங்கள்.

Sunday, March 22, 2020

கொரோனா துதி 


கோவில்களை மூட வந்த கொரோனாவே
பாஸ்கரன்களை பெயில் ஆக்க வந்த  கொரோனாவே
உலகம் சுற்றிய கிழவர்களை
ஊ(வீ)ட்டுகுள்  பூட்டிய கொரோனாவே

உனக்கு
சாதி மதம் பாகுபாடில்லை
நாட்டு எல்லை ஏதும் இல்லை

பள்ளி பிள்ளைகளுக்கு விடுமுறை அளித்தாய்
அவர் விளையாடிட பெற்றோரை வீட்டில் அடைத்தாய்

கை தட்ட சொன்னோரை
கை கொட்டி சந்து(தி) சிரிக்க வைத்தாய்

இவை யாவும் செய்திட நீ பறித்த உயிர் போதாதா
அப்பால் போ என்ற
தீண்டாமை வலி புரிந்தது

இப்போது நீ
அப்பால் போ 


Wednesday, September 25, 2019

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது
குழைந்தை பெற்ற பின்னால்

ஒரு வேளை எனக்கு வயாசயிடிச்சா இல்லை
மனசு இளகிடிச்சா இல்லை
இதய நோய் ஏதாவது ச்சி
இளகிய மனம் கொண்டவர்கள்,வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், இதய நோயாளிகள் எல்லாம் பார்க்காதீங்க தவிர்க்கவும்னு சொன்ன வீடியோ, போட்டோ இப்படி எதையும் எந்த ஒரு கூச்சமும் இல்லாம பார்த்த என்னால்

இப்போ எல்லாம் 'காணவில்லை' போஸ்டர கூட முழுசா பார்க்க முடியல அதுலயும் அந்த போஸ்டரில் குழைந்தை சிரித்த பிடி இருந்தால் இன்னும் மோசம்.
அப்படி சிரிச்ச குழைந்தை இப்ப எப்படி கஷ்டப்படுதோனு மனசு அடிசிக்கும் அன்னைக்கு தூக்கம் தூர போயிடும்
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது

பாரத் மாதா கீ ஜே 






Wednesday, August 1, 2018

இன்று அவள் பிறந்த நாள்

வாழ்த்தும் நான்

தகர பெட்டியாய் .......
கேள்வியாய் ........
ஹீரோவாய் ........

விளக்கம் 1

தங்கம் அவள்.....
விடை அவள்.....
ஹீரோயின் அவள்.....

விளக்கம் 2

தங்கம் அவளை பூட்டி பாதுகாக்கும் தகர பெட்டி நான். என் மதிப்பு அவள் என்னுள் இருக்கும் வரை தான்.

பதில் இல்லா கேள்விக்கு பயன் இல்லை. அவள் இல்லா எனக்கும்.

ஹீரோயின் - அவள். என்னை அவள் ஏற்றுக்கொண்டதால் ஹீரோ ஆனேன்.

விளக்கம் 3

அவளை பூட்டி வைத்திருக்கும்
அகந்தை கொண்ட ஆண் மகன் அல்ல
அவளை விட்டு விட்டால் என்னை யாரும் மதிக்க மாட்டார்கள் என்னும் உண்மை யறிந்தவன். அவளால் நான் மதிக்க படுவதை மனதார ரசிக்கும் அவளின் ரகசிய ரசிகன் நான்.

விடையால் முழுமை பெரும் கேள்வி போல்
அவளால் முழுமை பெற்ற நான்.
என்னுள் முழுமை நிரப்பியவள்,
என்னுள் முழுமையாய் இருப்பவள்,
அவள் இல்லையேல், அரைகுறை நான் என்பதறிவேன்
என் எல்லா கேள்விக்கும், பதில் உண்டு அவளிடம்
பதிலாய் அவள் இருக்கும் தைரியத்தில் தான், நான்
கேள்வியாய் கேட்டுக்கொண்டிருக்கிறேன்

பூவின் வாசம், நாறுக்கும் வீசும்
பூவோடு சேர்ந்த பின்னால்.
(நாயகி) அவளை காதலித்ததால்
நாயகன் ஆகவில்லை நான்,
அவள் என்னை கண்கொண்டு பார்த்தால் ஆனேன்.

மலையை மகுடாக்கவா என்றேன்
வேண்டாம் என்னோடு இரு என்றாள்
இருக்கிறேன் அவள் கட்டளை ஏற்று
இன்றும், அவளுடன்
என்றும் இருக்க வேண்டும் என்ற பேராசையுடன்.

புகழ்ச்சி அவளுக்கு புடிக்காது, இந்த தமிழ் அவளுக்கு புரியாது
ஆனா இது புகழ்ச்சி இல்லை, பொய்யும் இல்லை

நான் பொய் சொன்னா உடனே கண்டுபுடிச்சிடுவா, இதை
எழுத்து கூட்டி பிடிக்க மட்டும் ஒரு நாள் எடுப்பா

இன்று அவள் பிறந்த நாள்