More than a Blog Aggregator night writter

Thursday, February 3, 2022

ஜனவரி  மாத  DIVIDEND TRAILER

Dividend வருவாய்  பற்றிய சின்ன முன்னோட்டம், அதையும் சினிமா தனமாய் யோசித்ததின் விளைவு 

இது வெறும் trailer தான் 




Tuesday, January 25, 2022

TFSA ஓர் எளிய விளக்கம்

 அன்பு இணைய நட்புக்கு வணக்கங்கள்,

வீடியோவாக பார்பதற்கு கீழே உள்ள LINKயை கிள்க் செய்யவும்

👇👇👇



இந்த இழையில் TFSA a/c என்றால் என்ன என்பதை, எனக்கு தெரிந்த மட்டில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இங்கு கனடாவில் நாம் சம்பாரிக்கும் ஒவ்வொரு டாலருக்கும் வரி கட்ட வேண்டும் பெரும்பாலும் வரி பிடித்தம் போக மீதம் தான் நம் கையிக்கே வரும். ஆனால் நீங்கள் ஈட்டும் எந்த ஒரு வருமானத்துக்கும் வரி கட்ட தேவையில்லை என்றால் எப்படி இருக்கும். ஆச்சிரிய பட வேண்டாம் அது தான் உண்மை. 

நீங்கள் முதலீடு செய்த, கவனிக்கவும், சேமித்த அல்ல, முதலீடு செய்த மூலதனத்தின் வருவாய் மற்றும் அபிவிருத்தி - அனைத்துக்கும், அது எவ்வளவு பெரிய தொகையாய் இருந்தாலுமே நீங்கள் ஒரு சென்ட் கூட வரி செலுத்த தேவையேயில்லை. அந்த முதலீடு TFSA a /cடில் இருந்தால். 

ஒப்பீட்டளவில் நம் ஆட்களுக்கு சேமிக்கும் பழக்கம் மற்றவர்களை விட சற்றே அதிகம். ஆனால் முதலீடு செய்யும் பழக்கமோ வழக்கமோ நம்மிடம் அவ்வளவாய் இல்லை. உதாரணமாய் என்னையே நான் சொல்வேன். கனடா வந்த புதிதில் TFSA பற்றி கேள்வி பட்டு எனது வங்கியில் ஒரு TFSA a/c ஆரம்பித்தேன். அதில் மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையும் செலுத்தி வந்தேன். சில மாதங்கள் கிழித்து வங்கியில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. அந்த உரையாடலின் சுருக்கம் இதோ -- நீங்கள் chequing a/c, saving a/c மற்றும் TFSA a/c வைத்து இருக்கின்றீர்கள் அனைத்திலும் சிறு தொகையும் வைத்திருக்கின்றீர்கள்.

saving a/c மற்றும் TFSA a/c இரண்டையும் ஒரே மாதிரி கையாளுகின்றீர்கள் TFSA a/cடையை இன்னும் முழுமையாய் பயன் படுத்த நீங்கள் ஏதாவது ஒரு mutual fundலோ equity fund லோ அல்லது GICலோ முதலீடு செய்ய வேண்டும் அப்போது தான் அதன் முழு பயனையும் அடைவீர்கள் என்று கூறி ஒரு mutual fundடையும் பரிந்துரை செய்தார். நானும் அவ்வாறே செய்தேன் அதை ஒரு மாத செலவாய் எண்ணியே  automated withdrawal மூலம் செய்து வந்தேன். 

2 வருடங்கள் பிறகு ஒரு இன்ப அதிர்சசி எனக்கு காத்திருந்தது. நான் செய்த முதலீடு 30% வளர்ந்து இருந்தது. அதன் பின்னே தான் stock market பற்றிய அறிமுகமும் மற்றும் வளர்சசியும் கண்டேன்.

இதற்கு TFSA என்று பெயர் வைத்ததற்கு பதிலாய் Tax Free Invesment Account என்று தான் வைத்திருக்க வேண்டும். 

சரி இப்போது இதை யார் யார் தொடங்கலாம் என்று பார்ப்போம். கனடாவில் வசிகின்ற  18 வயது பூர்த்தியான எவரும் தொடங்கலாம். ஒரு வேலை நீங்கள் இத்தனை ஆண்டுகளாய் இங்கே வசித்தும் தொடங்கவில்லை என்றால் கவலை பட வேண்டாம், இப்பொழுதே தொடங்கி விட்ட அத்தனை வருட தொகையும் எப்பொழுது வேண்டுமானாலும் செலுத்தி விட்டதை பிடித்து கொள்ளலாம். அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட தொகையை நாம் இதில் இட்டு ஈட்ட அனுமதி தருவார்கள்.

உங்களுக்கு 2009ல் 18 வயதோ அல்லது அதற்கு மேலோ பூர்த்தி ஆகி கனடாவில் அன்று முதல் இன்று வரை விசித்திருந்தால் உங்கள் பயன் பாட்டுக்கு உள்ள தொகை 75000$. எனவே better late then ever என்பது போல் இதுவரை நீங்கள் இதை பயன் படுத்த வில்லை என்றால் இனிமேல் இதை பயன் படுத்தி கொள்ளலாம்.    

உங்கள் வங்கிகளிலோ வேறு முதலீட்டாளர்களிடமோ அல்லது Wealth Simple, Questrade போன்ற appகளிலோ ஒன்றோ அதற்கும் மேற்பட்டோ எத்தனை TFSA வேண்டும் என்றாலும் தொடங்கி கொள்ளலாம். அதிலும் self direct trading accountடோ அல்லது automated மற்றும் advised fund purchaseலோ சேர்ந்து பயன் பெறலாம்.

வங்கிகளில் national bank தவிர்த்து அனைத்து வங்கிகளிலும் டிரேடிங் fee மற்றும் MER fee mutual fundடுகளுக்கு வசூலிக்க படும். 

appகளில் Wealth Simpleலில் எந்த ஒரு ட்ரடுக்கும் fee கிடையாது மற்றும் உபயோகிக்க மிகவும் எளிமையான ஒன்றும் கூட. இந்த appபினை தரவிறக்கி UMRIBA என்னும் referral code பயன்படுத்தினால் உங்களுக்கு இலவசமாய் சில stockகின் shareகலோ அல்லது பணமோ கிடைக்கும்.

எந்த share வாங்கலாம் என்ற பரிந்துரை தெரிந்து கொள்ள இந்த channelலை subscribe செய்து கொள்ளவும். 

நட்புகளுக்கு நன்றியும் வணக்கமும். 





Sunday, January 17, 2021

பங்கு சந்தை இரகசியம்

பங்கு சந்தை இரகசியம் 

பங்கு சந்தையில் முதலீடு செய்யும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் இந்த வீடியோவில் உள்ளது 

எது முக்கியம் நீங்கள் போடும் பணத்தின் அளவா இல்லை  எத்தனை ஷேர்கள் வைத்திருக்கின்றீர்கள் என்பதா ? 
விடை வீடியோவில் ....



subscribe செய்யுங்கள்.

Friday, January 1, 2021

HOW TO PICK A SHARE IN STOCK MARKET



Hi friends in this video I'm going to show how I choose a share in the stock market.

 before that, I want to choose the sector. Let's start from this


 Nowadays everybody has a cell phone it’s become essential In our daily life 

you pay the mobile bill every month

 how much we pay a month

 The basic plan starts from 35  dollars and it goes high to $85   or more 

So I am going to the communication sector


 in that Telus is my choice for today.

 so  here is their Revenue

 you can see it's growing organically for the last 3 years so the profits are 

now their  net income also in increasing mode but they just missed a little bit in this year as everyone knows it's because of the pandemic 

 Telus communication is  owned by Telus Corporation where the headquarter is in Vancouver

Today prices are 25 dollars $0.21 and it's paying a dividend off 4.94percentage which I want to hear

now let's go see what the experts say


 most of them Recommending to  strong buy and   buy  and few of them recommending to hold it

 you can see none of them is recommending   to sell  or underperform so I definitely go with the expert’s advice

  the price ranges are - high price is 32 dollar  where 24  is the low price and the average is 26.77 

 the current price is $25 so it's a good chance to buy this company right now but I’m looking for a long term investment so I am waiting to get it a little bit down to $20 

what makes the difference if buying at a low cost  will have a chance of a huge profit when the  price go high and

 even  if the price goes low it doesn't hurt too much

1 minus point in Telus is, they r a little behind on the race of 5 g when comparing to its peers.

Still, they have time to take a leadership position in the race. It is my own opinion.


Their Revenue, earnings, profit, and future plans are convincing me to buy it. 

The next step is going to compare with their peers and the final step is to invest. 


Here v can c the dividends paying by telus

They keep on increasing it even on the pandemic year




Make money work for you

Saturday, November 21, 2020

பண்டிகை 

பண்டிகைகள் மனிதனுக்கு மட்டற்ற மன மகிழ்ச்சியை தரும். அதற்கு முதன்முதல் காரணமாய் நான் எண்ணுவது  கொண்டாட்டம். அக்கொண்டாட்ட மன நிலையை கூட்டுவது - கூடியிருத்தல், சொந்தம் சூழ கூடி கும்மியடிப்பது (பண் இடுகை மருவி பண்டிகை என்றானதோ) மன நிறைவை, மகிழ்வை அதிகரிக்கும் செயல்கள். அன்பை, மகிழ்வை பரிமாறி கொள்வதில் உள்ள ஆனந்ததிற்கு என்றும் அளவேயில்லை.

என் பள்ளிக்கால பண்டிகை விடுமுறை நாட்களில் குடும்ப சொந்தங்கள் எல்லோரும் ஒன்று கூடி  கூத்தடித்தது இன்றும் என் நினைவில் பதிந்த பசுமையான, இனிமையான தருணங்கள்.

 பசுமை வயலில் சாமி கும்பிட்டது 

பனங்காய் பறித்து தின்றது 

பம்செட்டில் குளித்தது 

என்று என்றும் மறக்க முடியா மலரும் நினைவுகள் அவை. 

தபால் கார்டு மூலம் வாழ்த்து எழுதி போட்டு, 

                                                           பெற பெற்று 

                                                           அதை சேர்த்து வைத்து 

அழகு பார்த்தல் ஒரு கவித்துவமான நிகழ்வுகள்.  இவை இன்று இணையத்தால் இழந்தவை என்று குறை கூறுவதற்கு பதில், அதை இணையத்தில் இணைத்து பார்க்க, இவ்வாண்டு தீபாவளியில்  ஓர் சிறு முயற்சி செய்து பார்த்தேன். நான் பகிர்ந்து கொண்ட அணைவரும் என்னை வெகுவாய் பாராட்டிய பொழுது பாலிய வயதிற்கே சென்றேன்.

கார்டு போட்ட காலம் போய் போனில் எல்லாம் முடித்துக் கொள்ளும் காலமும் வந்தது. மூச்சுக்கு முந்நூறு தடவை போன கிராமத்துக்கு, முடிந்தால் மட்டுமே போவது என்றானது. ஆனால் போகின்ற ஒவ்வொரு முறையும் வட்டியும் முதலுமாய் சேர்த்து வைத்து கொண்டாடி தீர்த்து விடுவது வழக்கமாய் ஆகிவிட்டது. 

டெல்லியில் இருந்தபோது ஹோலி கொண்டாடியது ஒரு புது அனுபவம். ஊரே உற்சாகமாய் இருக்கும், அது நம்மையும் தொற்றி கொள்ளும். தெரியாத ஊர் - பழகாத மக்கள் - புரியாத மொழி - அறியாத பண்டிகை என்பதையெல்லாம் தாண்டி நம்மை உள்ளிழுத்து கொள்ளும் சக்தி பண்டிகைகளுக்கு உண்டு. அதன் மூலம் புது உறவகள் பிறக்கும், வலுவாகும், அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும். ஊரு விட்டு ஊரு போன பின் தான் தொலைபேசி வாழ்த்தின் மகிமை உணர்தேன். புது துணி அணிவதில் கிடைக்காத உற்சாகம், தின்பண்டகளில் கிடைக்காத மன மற்றும் வயிற்றின் நிறைவு தாய் தந்தையிடம் இருந்து வரும் அந்த தொலைபேசி குரலில் நிறைவடையும். வாழ்க அறிவியல்.

நாடு விட்டு நாடு சென்ற போது(UK) கொண்டாடிய பண்டிகை halloween. அவ்விரவு முழுவதும் தூங்காமல் எலும்பு கூடு ஆடை அணிந்து அலைந்தது ஒரு திகில் அனுபவம்.  இன்று என் மகனின் விருப்ப விழாக்களில் halloweenவியனும் ஒன்று. வெவ்வேறு பண்டிகைகள் உலகம் முழுக்க இருந்தாலும் அவற்றில் ஒரு ஒற்றுமை உண்டு, அது பகிர்தல். வெறும் கூடை எடுத்து ஒவ்வொரு வீடாய் சென்று அதில் இனிப்பும் பரிசுமாய் நிரப்பி கொண்டு வரும் சிறுவர்களின் மன நிறைவும் மகிழ்சசியும் சொல்லில் அடங்காது, சொல்லியும் புரியாது. கொடுப்பதிலிலும், பெறுவதிலும் உள்ள உள்ளுணர்வு ஓர் உயர்ந்த உணர்வு. 

இருக்கும் பண்டிகைகளிலே எனக்கு மிகவும் பிடித்த ஒன்று பொங்கல். காரணம் 
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 
அன்றே மறப்பது நன்று 
என்ற முப்பாட்டன் வள்ளுவன் வாக்குக்கு சான்றாய் கொண்டாட படும் ஒரு பண்டிகை பொங்கல். விருந்தோம்பலில் சிறந்த நம் சமூகம் நன்றி நவிழ்த்தலை நாட்கணக்காய் கொண்டாடி தீர்க்கும் சிறப்பு வாய்ந்த பண்டிகை அல்லவா இப்பொங்கல் பண்டிகை. கரும்பு தின்ன கூலியா என்ற எண்ணம் எழுகிறது பொங்கலை பற்றி எண்ணுகையில்.
பழையன கழிதலும் புதியன புகுதலுமே, பூமி என்றும் புத்துயிருடன் இருக்க காரணம். அதையே நாம் போகி பண்டிகையாய் கொண்டாடி மகிழ்கின்றோம். அப்படி ஒரு பழைய சம்பவமான புத்தாடை தைத்து போடும் பழக்கத்தில் இருந்து விடுபட்டு முதன்முறையாய் ஆயுத்த ஆடை நான் அணிந்தது 90களின் தொடக்கத்தில். அப்பொழுதெல்லாம் விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முதல் நாளில் வண்ண ஆடை அணிந்து செல்ல அனுமதி உண்டு. அப்படி ஒருமுறை பண்டிகை ஆடை (readymade)  அணிந்து பள்ளி சென்ற நாளில் கிடைத்த அனுபவம், அனைவரும் ஆச்சிரியமாய் பார்த்த சமயம், ஏதோ பெரும் சாதனை சாதித்த உணர்வு என்னுள். இன்று மீண்டும் customise tailoring எனும் வட்டத்தில் வந்து நிற்கின்றோம்.

விடலை பருவத்தில் பண்டிகைகளை வீட்டில் கொண்டாடுவதற்கு பதிலாய் சினிமா தியேட்டர்களில் கழித்த காலமும் எனக்குண்டு. திருச்சி மாரீஸ் போய்விட்டால் போதும் 1 நாளைக்கு 3 படம் பார்த்து விடலாம். படம் பார்க்கும் மகிழ்ச்சியை விட முதல் நாள் முதல் ஷோ என்னும் மயக்கம் தான் மேலோங்கி இருந்தது. படமும் புரியாது, பணம், நேரம் விரயம் வேறு, என்று புரிந்த பின் அந்த பழக்கமும் மாறியது.

தொலைக்காட்சிகள் கோலோச்ச தொடங்கிய நேரம். பல பண்டிகைகள் அதன் முன்னே கழித்தேன். காலை பட்டிமன்றம் தொடங்கி இரவு சிறப்பு திரைபடம் வரை கண்டு  கழித்த காலமுண்டு. அதுவும் சலித்து போய் மீண்டும் பண்டிகையை பண்டிகையாய் கொண்டாடி வருகிறேன் இப்போதுவரை. காரணம் ஒன்னும் பெருசா இல்லை, எல்லாம் அறிவியல் முன்னேற்றம் தான். ஏதும் எப்போவும் இணையத்தில் இருக்கும் போது அந்த நாளுக்கான முக்கியத்துவம் கொடுத்து பண்டிகையை சிறப்பாய் கொண்டாடுவது, சிறு பிள்ளைகளுக்கு அப்பழக்கத்தை ஊட்டுவது அவர்களுடன் சிறுவர்களாய் மாறி சில மணி நேரம் மகிழ்வாய் கழிப்பது என்றிருக்கின்றேன்.
வாழ்வை வளமாக்கும் பண்டிகைகளை கொண்டாடுங்கள், மகிழ்ந்திருங்கள்.





   

இக்கட்டுரை பிரதிலிபி போட்டிக்கு எழுதியது.

Friday, May 22, 2020

Meme's video version


அஜித், விஜய், ரஜினி, கமல் போன்றோர் நடித்த சில காட்சிகளின் தொகுப்பில் "பிறன்மனை நோக்காத  பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு" என்ற குறளின் கருத்தை வலுயுறுத்திய Meme.

மற்றும் 90's kidsயை கலாய்க்கும் meme, மன்னிக்கவும் STR.

quarantine டைம்ல என்கிட்ட  மனைவி, குழைந்தைகள் எதிர்பார்ப்பும், நான் செய்வதும் பற்றிய Meme.

ஜோதிகாவின் பேசிய கருத்து - என் பார்வையில் (Meme ல்).

திடீர் சைவ பிரியர்களை கேள்வி கேட்கும் Meme.

துப்புறவு பிணியாளர்களை திடீரென தெய்வமாய் மதிக்கும் சிலரை கலாய்க்கும் Meme.



Meme's என்னுடையது, videoவா மாற்றியது என் மனைவியார் வேலை.


எனவே அவுங்களுக்கும் ஒரு Meme போட்டாச்சு  

Wednesday, May 20, 2020

CANADAவில் 5வயது தமிழ் சிறுவன் செய்யும் சமையல்   



சமையலில் சிறந்தவர்கள் ஆணா? பெண்ணா? 
கீழேயுள்ள youtube படங்களை பாருங்கள்.

முயற்சியும் ஆர்வமும் உள்ளோருக்கு கை வரும் ஒரு கலை சமையல், அது பால் வகையோ, வயதோ சம்மந்தப் பட்டது அல்ல.







Share, Like & Subscribe இதை சொல்லாட்டா  youtube சேனலில் முழுமைப் பெறதாம் .

Friday, May 1, 2020

MEME by Me

90's Kids - Simbhu STR version




youtubeல் காலம் கடத்திய என்னை கொரோனா கொடூரமாய் தாக்கி facebookக்கு தள்ளிய போது 


அன்றும், இன்றும்...



Thursday, April 30, 2020

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் 

#tccontest2020
யாதும் ஊரே யாவரும் கேளிர்
இப்படி சொல்ல வேண்டும் என்றால் பூங்குன்றனார்  உள்ளம் எவ்வளவு பெரியதாய் இருக்க வேண்டும். உலகமே உறவு என்ற கூற்றை நம் மனதில் ஆழ பதித்துக் கொண்டு  கட்டுரைக்குள் செல்வோம்.

உறவில்லா உயிர் உலகிலில்லை. இரு உயிர் கொண்ட உறவில் உதிப்பதே ஓர் உயிர் (மகர்ந்த சேர்க்கை விதிவிலக்கு). தாய் தந்தை உறவை தாண்டி, விலங்கில் இருந்து மனிதம் மேன்மை பெற இக்குடும்ப உறவுகள் உரம் இட்டன என்றால் மிகை அல்ல.

வாழ்க்கை சக்கரம் சுழல அனைத்து உறவும் தேவை. அச்சான்னியாய் நான் கருதும் உறவு வாழ்கை துணை.

பெற்றோர் உறவில் இருக்கும் அன்பு,
உடன் பிறப்பில் உள்ள பாசம்,
நட்புறவில் இருக்கும் அன்னோன்னியம்,
மாமன்,அத்தை உறவில் இருக்கும் உரிமை,
தாத்தா பாட்டி உறவில் இருக்கும் கரிசனம்,
என்று எல்லா உறவில் இருக்கும் அம்சங்களும்
மற்றும் இவை எவற்றிலும் இல்லா ஓர் உறவு - வாழ்கை துணையில் மட்டுமே கிடைக்கும்.

 என் வாழ்க்கையில் நடந்ததை எடுத்துக்காட்டாய் சொல்ல விரும்புகிறேன்.பதின் வயதில் காதல் கொண்டேன், உறவுக்காரப் பெண் தான் என்றாலும் வேறு மாநிலத்தில் வசித்த அவள் குடும்பத்துக்கும் எங்களுக்கும் அவ்வளவாய் தொடர்பு இருந்ததில்லை. எனவே முதலில் அத்தொடர்பை பலப்படுத்தினோம் (ஜோடி, பூவெல்லாம் உன் வாசம் அளவுக்கு இல்லை என்றாலும்). பல வருட காத்திருப்புக்கு (பெற்றோர் சம்மதத்திற்காக) பின் திருமணம் முடிந்தது. திரை கடல் ஓடி திரவியம் சேர்க்க அயல் நாட்டில் இருந்ததால், பிரிவில் சில வருடங்கள் கழிய நேர்ந்தது. இப்பிரிவுகள் அப்போது வலி தந்தாலும், இப்போது நினைக்கையில் வலியினுடே வலுவும் சேர்த்திருக்கின்றது என்பதே உண்மை. 

ஆசை 60 நாள் மோகம் 30 நாள் ஆக மொத்தம் 90 நாட்கள். இன்னாட்களில் துணையின் பலம் பலவீனம் தெரிந்துக் கொள்ள வேண்டும். பலத்தை பெரிதுப் படுத்தி பெரிய ஆளாய் மாற்றா விட்டாலும், பலவீனத்தை குறைக்கா விட்டாலும் பெரிது படுத்தாமல் இருத்தலே நலம். என் பலவீனம் எனக்கு தெரிந்ததை விட என்னவளுக்கு நன்றாக தெரியும். அதை சீண்டாமல் இருக்க காரணம் காதலியே துணைவியாய் அமைந்ததே.

அவள் குறையை நான் குறை கூறுவதில்லை. காரணம் காதலன் என்பது மட்டுமல்ல அவையாவும் அவ்வளவு பெரிய குறை அல்ல என்பதுவுமே. இதை தான் காதல் கண்னை மறைக்கும் என்பார்களோ.
ஒரு உறவில் எல்லா வித உணர்வுகளும்
சதவிகிதத்தில் இருக்க வேண்டும். அவள் என் மீது கோவப்படுகின்ற போது ஏனோ நான் அமைதியாய் இருந்து விடுகின்றேன்.
அவளை பிரிந்து நான் சேர்க்கின்ற பணம் பயன் அற்றது என்பதை அறிவதற்கே சில காலம் கழிந்துவிட்டது. இளமையில் அனுபவிக்காத காதல், கலவி, காமம் எல்லாம் கண் கெட்ட பின் செய்யும் சூரிய நமஸ்காரம் தான். அவளை என்னுடன் அழைத்துச் செல்ல முடியாத சூழலில் நான் இந்தியா வந்திட முடிவு செய்தேன். இதில் என் சுயநலம் தான் முழு காரணம், ஆனால் பழி ஏற்றுக் கொண்டது அவள். வேலை கிடைப்பது எளிதாய் இருந்தாலும் அவையாவும் மீண்டும் எங்களை பிரிப்பதாய் அமைய சொந்த தொழில் தொடங்கினேன். பெரிய இலாபம் இல்லாவிட்டாலும் இன்பமாய் கழிந்த நாட்கள் அவை. தொழிலில் பக்க துணையாக அவளிருந்தாள், பக்கத்திலே இருந்தாள். விதி எங்களுக்கு வேறி வழி திறந்து விட்டது. மீண்டும் வெளிநாட்டு வாசம்.
NRIகளுக்கு இருக்கும் நன்மையும் தீய்மையும் - இங்கே 'நமக்கு நாமே' என்றிருப்பது. 

பிரசவ அறையில் அவள் கூட நான் இருந்தது அவளுக்கு பெரிய பலத்தை தந்தது. எனக்கு அவள் மேல் பெரிய மரியாதை, பாசம், இனி இவளை கண்ணீர் சிந்தவே விட கூடாது என்ற வைராக்கியம் தந்தது. என் தாய் பட்ட வேதனை நினைவில் வந்தது.  அதன் பிறகு பெண்களை பார்க்கும் விதம் மாறியது. 
இதை - பட்ட பின் திருந்தும் புத்தி என்றும் சொல்லலாம்.

காதலியாய் அவளை கொஞ்சியதை விட
மணைவியாய் அவளை உச்சி முகர்ந்ததை விட 
தாய்மையாய் அவளை கொண்டாடியது பேரின்பம். 

பேராண்மை என்னும் சொல், ஆண்களுக்கானது  மட்டும் அல்ல அது தாய்மையை குறிக்கும் போது தான் முழுமை அடைகின்றது


Friday, April 24, 2020

ஜோதிகா சொன்னது 

என் பார்வையில் 👇. கிட்ட தட்ட ஜோ சொன்னதின் MEME வடிவம். 














ஆனா அவுங்க இதை விட அழகா - மருத்துவமனை, பள்ளிக்  கூடங்கள் எல்லாம் ஜெய்ப்பூர் மாளிகை போல், தஞ்சை பெரிய கோவிலை போல் இருக்க வேண்டும். அதற்கு நன்கொடை கொடுங்கள் என்று தான் கூறினார்.

அதற்கும் நன்கொடை கொடுங்கள்.

Monday, April 20, 2020

தூய தமிழன் 

காறி உமிழன் 

பேட்டி 

எனக்கு ஒரு கனவு இருந்தது தூயத்தமிழ் பிள்ளை திரு காறி உமிழனை பேட்டி எடுக்க வேண்டும் என்று.
தூக்கத்தை கெடுத்த அந்த கனவு ஒருநாள் நிறைவேறியது. அந்த பேட்டி உங்களுக்காக இதோ 👇

வணக்கம் திரு காறி உமிழன் 
இந்த கொரோனா வைரசுக்கும் இல்லுமினாட்டிகளுக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றீங்க, கொஞ்சம் விளக்க முடியுமா?

காறி உமிழன் : கண்டிப்பா இது இலுமினாட்டிகளின் சதி தான். எப்படினா உலக மக்கள் தொகையை கம்மி பண்ணுவதில் அவங்க இப்ப இறங்கி இருக்காங்க. அதற்கு அவர்கள் கையில் எடுத்து இருக்கும் ஆயுதம் தான் இந்த வைரஸ் தொற்று. 

 நாம் : இந்த வைரஸை முதலில் சீனாவில்  பரப்ப காரணம், அங்கு மக்கள் தொகை அதிகம் இருப்பதாலா?

காறி உமிழன் : இல்லை. இதை உருவாக்கி பரப்பியதே சீன இலுமினாட்டிகள் தான். மக்கள் தொகையை கம்மி பண்ணுவது மட்டுமல்லாமல் அவர்கள் கைவசம் இருக்கும் அதிநவீன 5gயை மக்கள் அனைவரும் பயன் படுத்த வைக்க வேண்டும் என்பதும் அவர்களின் குறிக்கோள்.

ஒரு சின்ன எடுத்து காட்டு - கணினி துறையில் பலர் work from home எனும்  முறையில் வேலை செய்வதை அறிந்திருப்பீர்கள்.  
இந்த கொரோனாவால் இன்று அலுவல் சந்திப்புக்கள் மற்றும் பள்ளி படிப்புகள் என்று பல விதமான வேலைகளும் இணையம் வழியே நடக்கின்றது. அதை சாத்திய படுத்தியது 4g. 

இப்போது 5gக்கு வருவோம்.  5g என்பது சராசரி நிலைக்கும் உயர்ந்த தொழில் நுட்பம். அதை கொண்டு பல வியக்கத்தக்க செயல்கள் செய்ய முடியும். ஒருவரால் இருந்த இடத்தில் இருந்தே எல்லா வேலைகளையும் செய்ய முடியும். அதை கொண்டு இவர்கள் செய்ய நினைப்பது, மனித தொடர்புகளை முதலில் அழிப்பது. 
ஓட்டுனர் இல்லாத வாகனங்கள், மனித தயவு மிக மிக குறைந்த அளவே பயன் படுத்தும் எந்திரங்கள்  என்று அதன் வீச்சு மிகப் பெரியது.

இனி வரும் காலங்களில் என்னவெல்லாம் நடக்கும் என்றால்  

⏩இதில் முதலீடு செய்ய தயங்கியப் பெரு நிறுவனங்கள் இனி முதலீடு செய்வார்கள்.

⏩அலுவலகங்கள் நடத்த இடங்கள் தேவைப்படாது. எனவே அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தேவையும் குறைந்து விடும். பல தொழில்கள் அழியும்.சமுதாய சங்கிலி அறுபடும்.

இதன் பின் விளைவுகளை நீங்களே கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். 
தன்னுடன் வேலை பார்ப்பவர் யார் என்று யாருக்கும் தெரியாது. விளைவு-தொழில் சங்கங்கள் இல்லாமல் போய்விடும். 
மணி நேர ஊதியம் என்பதை ஒழித்து, பணி முடித்தால் மட்டுமே ஊதியம் என்றாகிவிடும். மிகை நேர (overtime) ஊதியம் என்பதே இல்லாமல் போய்விடும். ⏩இப்படி இதனால் ஆதாயம் அடையப்  போவது பெரு நிறுவனங்களே. 

⏩virtual reality மூலம் நீங்கள் உலகின் எந்த இடத்தையும் உங்கள் கண் முன் கொண்டு வரலாம், கூடவே அங்கு நிலவும் தட்ப பெப்ப நிலை, சுற்று சூழல், சத்தம் என்று நீங்கள் அங்கு நேரில் சென்றால் எப்படி இருக்குமோ அப்படியே உணர்வீர்கள். சுற்றுலா என்பது அரிதாகி விடும். அதை சார்ந்த பல தொழில்கள் காணாமல் போக சாத்தியம் அதிகம்.
உற்பத்தி சாரா அலுவல்கள் எல்லாம் இனி வீட்டில் இருந்தே செய்ய வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்  படுவோம்.

இன்னும் நாம் கற்பனை செய்ய முடியாத பல காரியங்கள் சாத்தியம் ஆகும்.

ஆனால் இதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். இன்றைய மக்களின் மன நிலைமை அதற்கு ஏற்றதாய் இல்லை, எனவே அவர்களை இதற்கு பழக்கப் படுத்த வேண்டும்.அதற்கான பிள்ளையார் சுழியே இந்த ஊரடங்கு அல்லது வீட்டிலேயே அடங்கு என்ற உலகடங்கு பின்பற்றப்  படுகின்றது.  

மனிதரை இத்தொழில் நுட்பத்துக்கு பழக்கி, அடிமை ஆக்கி, வீட்டிலேயே முடக்கி இவர்கள் சொல்வதை எல்லாம் செய்யும் பொம்மை ஆக்குவதே இவர்களின் முதன்மையான பெருந்திட்டம். 

மேலும் இது நிறுவங்களின் செலவை குறைத்து பெரு இலாபம் ஈட்டும் செயல்.

கூட்டமாய் இருந்தால் ஆடுகளும் சிங்கத்தை துரத்தி அடிக்கும். அதுவே தனித்து விடப் பட்ட யானை பலியாகும்.

இலுமினாட்டிகள் இப்போது செய்வது நம்மை தனிமைப்படுத்தி, அதை நம் புதிய வழக்கமாய் மாற்றுவதே.

நாம் : அப்படியானால் இந்த வைரஸை அழிக்கவே முடியாதா? மேலும் இந்த ஊரடங்கை பின் பற்ற கூடாதா ?

காறி உமிழன் : இலுமினாட்டிகள் இதற்கான காலக்கெடுவை ஏற்கனவே தீர்மானித்து வைத்து விட்டார்கள். அரபு தேசத்து வளமே எண்ணெய் தான். போக்குவரத்தை பெரும் அளவு குறைத்து விட்டால் எண்ணெயின் தேவை கம்மியாகி விடும், அவர்களின் வளம் குறைந்து விடும்.
அவர்களின் இலக்கை அடைந்த உடன் இந்த வைரஸை அழித்து விடுவார்கள். 
 நாம் இந்த ஊரடங்கை கண்டிப்பாக கடைபிடித்தே ஆக வேண்டும். ஆனால் அவர்கள் சொல்லும் தொழில் நுட்பத்தை முற்றிலுமாய் தவிர்க்க வேண்டும்.  நம் தமிழ் முன்னோர்கள் கடைப்பிடித்த உழவு, கால் நடைப் பராமரிப்பு என்ற தற்சார்பு வாழ்வையே வாழ வேண்டும். அதுவே நாம் அவர்களை வெல்லும் உத்தி. இப்படி ஒவ்வொரு தமிழனும் வாழ வேண்டும் என்பதே என் கனவு.

நாம் : உங்கள் கனவு நம்மை பின் நோக்கி இழுத்து செல்லாதா - என்னும் போதே பின் மண்டையில் ஓர் அடி "பகல்ல தூங்குறதும் இல்லாம கனவு கனவுனு கனவுல பொலம்பல் வேற"-னு மனைவி உலுப்ப எழுந்து உட்கார்ந்துட்டேன்.

ச்சே... வெறும் கனவா.... அதும் பகல் கனவா ..... அப்ப பலிக்காது என்ற மனநிறைவுடன் விடைபெற்று கொள்கிறேன்.







Thursday, April 16, 2020

Meme முயற்சி -2



திடீர் சைவ உணவுக்கு மாறியவர்களை பார்த்து 

👇

👇

 



திடீர் சமையல் காரர்களாய் மாறியவர்களை பார்த்து








மற்றவர்களை பற்றி சொன்ன பின் என்னைப்  பற்றி சொல்லாமல் இருக்க கூடாது

 👇

👇





Friday, April 3, 2020

சொல்லுக சொல்லை 

தமிழ் சொல்லும் parasite வார்த்தைகளும் 

ஒரு மொழி தோன்றவும் அழியவும் சொல்லே இன்றியமையாதது. பல parasite ஒட்டுண்ணிச்  சொற்களுக்கு ஓர் மொழி இடம் கொடுத்தால் அம்மொழி மெல்ல சாகும்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
இக்குறளின் பொருள் அனைவரும் அறிந்ததே.

வார்த்தைதையின் அர்த்தம் அர்த்தமற்றவை
சொல்லின் பொருள் புரிந்தவருக்கு.

இனிமையான எளிமையான தமிழ்ச் சொற்கள் இருக்க கடினமான (கஷ்டமான) ஒட்டுண்ணியை தவிர்ப்போம்.
ஒரு மொழியில் புதுச் சொற்கள் உருவாகுவது இயல்பு. ஆனால் இயல்பில் ஓர் சொல் இருக்க அதற்கு புதிய வார்த்தை உருவாக்குவது அச்சொல்லை நீர்த்துப் போக வைக்கும் செயலே.
இதற்கு எடுத்துக்காட்டு மேலே சொன்ன சொல் - வார்த்தை, பொருள் - அர்த்தம். ஏன் இதை உதாரணமாக அல்லாமல் எடுத்துக்காட்டாய் விளக்குகிறேன் என்றால் உதாரணமே ஓர் ஒட்டுண்ணி. தவறானச் சொல்.

பயன்பாட்டில் உள்ள சொல் ஒட்டுண்ணியா என்ற சந்தேகம் வந்தால் ஐயம் கொள்ள தேவையில்லை, சந்தேகம் ஓர் ஒட்டுண்ணியே.

அப்ப, எப்படி வித்தியாசம் கண்டு பிடிப்பது. ஆம் வித்தியாசத்தை கண்டு பிடித்து விட்டால் நமக்கு வேறுபாடு தெரிய ஆரம்பிக்கும், அப்போது தெளிவு பெறுவோம் வித்தியாசம் ஓர் ஒட்டுண்ணி என்று.

இதெல்லாம் ஒட்டுண்ணி சொற்களா என்று வியப்பு வருகிறதா? வரட்டும் தப்பில்லை பிரமிப்படையா வரையில். காரணம் பிரமிப்பு ஓர் ஒட்டுண்ணியே.

பள்ளிக்கூடங்களில் தமிழில் பேசினால் அபராதம் விதிப்பது தவறு, தண்டம் விதிப்பது சரியா என்றால். இல்லை. ஆனால் தண்டம் சரியான தமிழ்ச் சொல். அபராதம் ஓர் ஒட்டுண்ணி.

தண்டம் தமிழ்ச் சொல் என்றால் தண்டச்சோறும் தமிழ்ச் சொல் தானே. ஆமாம் சாதத்தில் உப்புப் போட்டு உண்ணும் அனைவருக்கும் சோறு தான் முக்கியம், சாதம் அல்ல. சாதம் தவிர்ப்போம், பிரசாதம் அறவே தவிர்ப்போம்.  சாதத்தின் மூலச் சொல் பிரசாதம் என்பதால் தானே அன்றி, இதில் நாத்திகம் ஏதுமில்லை.

விதவை என்னும் சொல்லில் (வார்த்தையில்) பொட்டு இல்லை, தமிழும் அவர்களை கை விட்டுவிட்டதே என்றதுக்கு
(கட்சிக்கு அப்பாற்பட்டு) கலைஞர் ஓர் தமிழ் அறிஞராய் சொன்னது, விதவை ஓர் ஒட்டுண்ணி. கைம்பெண் என்பதே தமிழ்ச் சொல். அதில் ஒன்றுக்கு இரண்டு பொட்டு இருக்கும். தமிழ் யாரையும் கைவிடாது, எப்போதும் கை தூக்கி மட்டுமே விடும் என்று.
சமுதாயத்தின் பார்வையில் மறுமணம் = இரு பொட்டு.
தமிழில் இருப்பது இரு புள்ளி.

இப்போது கட்சியை உட்படுத்தி ஓர் விளக்கம். நாம் தமிழர் சின்னம் (விவசாயி) ஓர் ஒட்டுண்ணி, தமிழ்ச் சொல் அல்ல.
அடங்க மறு, மண்டியிடாத மானம். தமிழர், யார் தமிழர் என்று விதைத்த வினையினால் விளைந்த வினை - கொள்கையில் சமரசம் செய்துக்கொண்டு சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப தமிழ் அல்லாத சொல்லை ஏற்று கொண்ட கட்சி என்ற அவபெயர் தான் மிச்சம்.
உழவனே தமிழ். செய்யும் வினையே பெயராய் இருக்கும் தமிழில்.
உழுவதால் உழவர். Farm - Farmer என்பது போல்.


இவையாவும் ஒட்டுண்ணி சொற்கள், இதை தாண்டி கிரந்தச் சொற்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டுக்கு என் பெயரில் உள்ள 'ஷ' வகைகள். இன்று பலர் கிரந்தச் சொற்களை தவிர்த்து வருகின்றனர், வாழ்த்துக்குரிய செயல். போலவே இவ்வொட்டுண்ணியையும் தவிர்ப்போம்.
பல தமிழ் அறிஞர் சொல்ல கேட்டு அதை கடை பிடிக்க முயலும் கடையன் நான், எனவே
உங்களுக்கு தெரிந்த ஒட்டுண்ணி சொற்களை சொல்லுங்கள். தெரிந்துக்கொள்ள ஆவலுடன் உள்ளேன். ஆசையுடன் அல்ல காரணம் எனக்கு இருக்கும் ஐயம்
ஆசை ஓர் தமிழ்ச் சொல்லா ஒட்டுண்ணியா என்று. விளக்குவோருக்கு நன்றிகள் பல.



Monday, March 23, 2020

சாதாரண மஞ்ச பையின் கார்ப்பரேட் கதை


சில நிகழ்வுகள் சாதாரண நிகழ்வு போல தோன்றும் அல்லது தோற்றிவைக்கப்படும்.
இன்று நம் நினைவில் மங்கலாய் அல்லது மறந்த, அன்றைய தொண்ணுறுகளில் {90's kidsகளுக்கு} பயிற்சயமான சங்கதி தான்  - மஞ்ச பை.

ஆடி மாசம் துணி கடைகளில் அடிதடி கூட நடக்கும் இந்த மஞ்ச பைக்கு.
ஊரிலிருந்து மஞ்ச பையோடு மட்டும்  போய் சாதித்தவர்கள் ஏராளம்.

அடுத்து பிளாஸ்டிக் பைக்கு போவோம்.
கறி கடையில் மட்டும் தென்பட்ட இந்த வஸ்து (பொருள்-னு தமிழில் சொல்ல வேண்டாமேன்னு )
 மெல்ல......
ரொம்ப......
 சிரமப்பட்டு.......
 பிறகு அசுர வளர்சியாய் அங்கிங்கெனாதபடி எங்கும் நிலைத்து நின்றது, நிற்கின்றது.

இப்படி அது வளர பல காரணிகள் காரணமாய் இருந்தது. அதில் ஒன்றும், முக்கியமானதும் user friendly.
user  friendly என்பதில் அதை கையாளுவது, பராமரிப்பது முதல் விலை மலிவு வரை எல்லாம் அடங்கும்.

இங்கே நாம் நினைவில் கொள்ளவேண்டியது ஒன்று உள்ளது - அந்த தொழில் ரகசியம் என்னவென்றால் வணிகருக்கு லாபம் தரக்கூடியப்  பொருட்கள் மட்டும் தான் சந்தைப்  படுத்தப் படுக்கின்றது, பொது மக்கள் கைகளுக்கும் கிடைக்கின்றது.
இப்படி தான்  மஞ்ச பையா? பிளாஸ்டிக் பையா ? என்ற கேள்விக்கு வணிகர்கள் தேர்ந்தெடுத்தது தான் இந்த பிளாஸ்டிக் பை. இதனால் விளைய போகும் ஆபத்து அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை அல்லது குறைவு.

இது மக்காத குப்பை இதனால் பெரும் ஆபத்து,
தவிர்த்திடுவோம் நெகிழியை என்று இப்போது கூவுகின்றோம்.

நாமும் "பழைய குருடி கதவை திறடி" கணக்காய் மக்கும் குப்பைகளான  -  வண்ண பைகளை கையில் சுமந்துக்கிட்டுப் போகின்றோம்.

மேற்சொன்னவை சாதாரண நிகழ்வு.
வளர்ச்சி - வீழ்ச்சி - வளர்ச்சி என்கின்ற வட்டம் - னு புரிந்துக் கொள்ளலாம்
இல்லை
இதில் அரசியல் இருக்கு, சூழ்ச்சி இருக்கு, லாபம் இருக்கு, வியாபர தந்திரம் இன்னும் பலது நாம் அறியாதது இருக்கு - னு ஐயப்படலாம்.

இந்த பிளாஸ்டிக்  மெல்ல......ரொம்ப...... சிரமப்பட்டு.......எப்படி எல்லா இடங்களிலும் வந்தது. மஞ்ச பையை ஒழித்து, பின்னே அந்த இடத்தை எடுத்துக்  கொண்டது. இதுக்கு பல உள்ளடி வேலை செய்திருக்கலாம்.
மஞ்ச பையை  அவமான பொருளாய் மாற்றுவது,
(பெருசா வந்துட்டான் மஞ்ச பையை தூக்கிக்கிட்டு மஞ்ச மாக்கான்)
இப்படி மஞ்ச பை பயன்ப்  படுத்துவோரை அதில் இருந்து விலகி செல்ல வைத்து,
சந்தை படுத்தப்  படாமல் தவிர்த்து,
பின்னே  அந்த இடத்தை எடுத்து கொண்டது.

அன்று இலவசமாய் கொடுத்த இந்த பைக்கு, இன்று விலை போட்டு விற்கின்றனர். இன்னும் மேலே போய் துணி பைக்கு அதிக விலை வசூலிக்கப்படுகின்றது. 

இதில் லாபம் அன்றும் இன்றும் என்றும் வணிகர்களுக்கு மட்டுமே என்பதில் எழுகின்றது ஐயம்

பையில் மட்டும் அல்லாமல் பற்பசை, சோப்பு என்று அன்றாட பொருட்கள் பலதிலும் ஒரு மாற்றம், முன்னேற்றம் என்று நிகழ்ந்தது.

குடும்பத்ததுக்கு ஒரு சோப்பு என்கிற நிலை போய் முகத்துக்கு, கேசத்துக்கு, உடலுக்கு என்று தனித்தனியாய் ஒரு சோப்பு என்ற நிலை இன்று.

சாம்பல், கறி தூள், வேப்பங்குச்சி போய் பல் பொடி என்றாகி ஆளுக்கொரு டூத் பேஸ்ட் என்று தொடர்கிறது. அந்த பேஸ்டில் இன்று கறித்தூள், உப்பு, கிராம்பு, வேப்ப பவர் கலந்திருந்தால் சாதா பேஸ்டை விட விலை  அதிகம்.

சாம்பல், தேங்காய் நார், புளி, எலுமிச்சை கொண்டு விலக்கிய பாத்திரங்கள் அசுத்துமானவை என்று விளம்பர படுத்தி,
நுரை கொண்ட திரவம், வாசம் கொண்ட சோப்பு கட்டி, இதுவே சுத்தத்தின் ஆதாரிட்டி என்று நம்ப வைக்க பட்டது. அதில் நூறு எலுமிச்சியின் சக்தி பெற்று விலை உயர்வுடன் வலம் வருகின்றது இன்று.

புதுமையை விரும்பாத பழைமை வாதம் இல்லை இது.
செலவின்றி  அல்லது கம்மி செலவில் இருந்த பொருட்களை பயன்பாட்டிலிருந்து அகற்றி மீண்டும் அதையே அதிக விலைக்கு விற்கும் தந்திரம்.

படிப்படியாய் மூளைச் சலவை செய்யப்பட்டோமோ என்ற எண்ணம் எழ மேற்சொன்ன காரணங்களே காரணம்.

இது மட்டுமல்ல இன்னும் இருக்கின்றது. உங்களுக்கு தெரிந்ததை கமெண்டில் பிகிருங்கள்.

Sunday, March 22, 2020

கொரோனா துதி 


கோவில்களை மூட வந்த கொரோனாவே
பாஸ்கரன்களை பெயில் ஆக்க வந்த  கொரோனாவே
உலகம் சுற்றிய கிழவர்களை
ஊ(வீ)ட்டுகுள்  பூட்டிய கொரோனாவே

உனக்கு
சாதி மதம் பாகுபாடில்லை
நாட்டு எல்லை ஏதும் இல்லை

பள்ளி பிள்ளைகளுக்கு விடுமுறை அளித்தாய்
அவர் விளையாடிட பெற்றோரை வீட்டில் அடைத்தாய்

கை தட்ட சொன்னோரை
கை கொட்டி சந்து(தி) சிரிக்க வைத்தாய்

இவை யாவும் செய்திட நீ பறித்த உயிர் போதாதா
அப்பால் போ என்ற
தீண்டாமை வலி புரிந்தது

இப்போது நீ
அப்பால் போ 


Wednesday, September 25, 2019

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது
குழைந்தை பெற்ற பின்னால்

ஒரு வேளை எனக்கு வயாசயிடிச்சா இல்லை
மனசு இளகிடிச்சா இல்லை
இதய நோய் ஏதாவது ச்சி
இளகிய மனம் கொண்டவர்கள்,வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், இதய நோயாளிகள் எல்லாம் பார்க்காதீங்க தவிர்க்கவும்னு சொன்ன வீடியோ, போட்டோ இப்படி எதையும் எந்த ஒரு கூச்சமும் இல்லாம பார்த்த என்னால்

இப்போ எல்லாம் 'காணவில்லை' போஸ்டர கூட முழுசா பார்க்க முடியல அதுலயும் அந்த போஸ்டரில் குழைந்தை சிரித்த பிடி இருந்தால் இன்னும் மோசம்.
அப்படி சிரிச்ச குழைந்தை இப்ப எப்படி கஷ்டப்படுதோனு மனசு அடிசிக்கும் அன்னைக்கு தூக்கம் தூர போயிடும்
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது

பாரத் மாதா கீ ஜே